உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி, வேறு இடத்தில் மிகவும் தீவிரமான பிரச்சனையைக் குறிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குறிப்பிடப்பட்ட வலி, உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து நரம்புகள் மூளையுடன் நரம்பு வழிகளைப் பகிர்ந்து கொள்ளலாம், இதனால் வலி எங்கிருந்து வருகிறது என்பதில் குழப்பமடையலாம்.
உடலின் சில பகுதிகளில் ஏற்படும் வலி, பின்வருவனவற்றைக் குறிக்கலாம் என்கிறார் டாக்டர் பல்லேட்டி சிவ கார்த்திக் ரெட்டி (MBBS, MD General Medicine and consultant physician)
வலது வயிறு மற்றும் தோள்பட்டை
வலது வயிறு மற்றும் தோள்பட்டை வலி உண்மையில் பித்தப்பை பிரச்சினைகள், குறிப்பாக பித்தப்பை கற்கள் அல்லது கோலிசிஸ்டிடிஸ் (cholecystitis) ஆகியவற்றைக் குறிக்கலாம். இது ஃபிரெனிக் நரம்பு காரணமாக முன்னோக்கி வளையும்போது மோசமடைகிறது.
இடது கை
இடது கையில் உள்ள வலியானது மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது, ஏனெனில் இவை உணர்வுப் பாதைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இது செர்விலகல் ரேடிகுலோபதி காரணமாகவும் இருக்கலாம்.
கீழ் முதுகு
இது சிறுநீரக வலியைக் குறிக்கலாம். ஆனால் அனைத்து கீழ் முதுகு வலியும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூற முடியாது. தசைக்கூட்டு பிரச்சினைகள் (musculoskeletal problems) மிகவும் பொதுவான காரணங்களாகும். சிறுநீரக கற்களுக்கு, இடுப்பு வலி இருக்கும்.
கீழ் வலது பக்கம்
குடல் அழற்சி (Appendicitis) பொதுவாக கீழ் வலது அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து வலிகளும், இதனால் ஏற்படாது.
மார்பு மற்றும் கழுத்து
/indian-express-tamil/media/media_files/Eps753ZTKS7DqL3LwrRv.jpg)
மார்பு மற்றும் கழுத்தில் உள்ள வலி நுரையீரல் பிரச்சினைகளான நிமோனியா அல்லது ப்ளூரிசி போன்றவற்றைக் குறிக்கலாம், இது இருதய பிரச்சினைகள் காரணமாகவும் இருக்கலாம்.
மேல் இடது தோள்பட்டை
இங்கு வலி பொதுவாக மண்ணீரலுடன் தொடர்புடையது அல்ல. அதற்கு பதிலாக, மண்ணீரல் பிரச்சினைகள் இடது மேல் வயிற்றில் வலியை ஏற்படுத்தலாம், தோள்பட்டையில் மட்டுல்ல.
இடுப்பு அல்லது தொடை
இடுப்பு அல்லது தொடையில் வலி பொதுவாக தசைக்கூட்டு அல்லது நரம்பு பிரச்சினைகளால் எழுகிறது.
இடது தோள்பட்டை அல்லது மேல் வயிறு
இந்த வலியானது பொதுவாக குடலில் அல்லாமல், பகிரப்பட்ட மத்திய நரம்பு வழிகள் காரணமாக வயிறு அல்லது கணையப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
டெஸ்டிகுலர் பிரச்சனைகள்
டெஸ்டிகுலர் பிரச்சினைகளால் ஏற்படும் வலியானது, பகிரப்பட்ட உணர்ச்சி நரம்புகள் காரணமாக அடிவயிறு அல்லது உள் தொடையில் ஏற்படலாம்.
கருப்பை நீர்க்கட்டிகள்/சிக்கல்கள்
முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள உணர்வு நரம்புகள் வரை பரவும் இடுப்பு அழற்சியின் காரணமாக இவை கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தலாம்.
காது/தொண்டை நோய்த்தொற்றுகள்
மண்டையோட்டு நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் இந்தப் பகுதிகளில் ஏற்படும் வலிகள் தாடை அல்லது கழுத்தைக் குறிக்கலாம்.
செர்விகல் ஸ்பைன் பிரச்சனைகள்
இங்குள்ள பிரச்சினைகள் நரம்பு சுருக்கம் அல்லது எரிச்சல் காரணமாக கை அல்லது தோள்பட்டைக்கு கீழே குறிப்பிடப்படும் வலியை ஏற்படுத்தும்.
புரோஸ்டேட் பிரச்சினைகள்
இடுப்புத் தள தசை பதற்றம் அல்லது அருகிலுள்ள நரம்புகளைப் பாதிக்கும் வீக்கத்தின் காரணமாக கீழ் முதுகு அல்லது இடுப்பில் குறிப்பிடப்பட்ட வலி ஏற்படலாம்.
இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis)
இந்த நிலை நிச்சயமாக கீழ் முதுகு அல்லது கால்களில் வலியை ஏற்படுத்தும், ஏனெனில் இது அருகிலுள்ள நரம்பு முடிவுகளை பாதிக்கும் அழற்சியால் ஏற்படுகிறது.
வலி என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு சிக்கலான அம்சமாகும், மேலும் மூல காரணத்தை அடையாளம் கண்டு சரிசெய்ய செய்ய சுகாதார நிபுணர்களால் அடிக்கடி கவனமாக பரிசோதனை மற்றும் நோயறிதல் தேவைப்படுகிறது, என்று டாக்டர் ரெட்டி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“