scorecardresearch

2 ஆண் குறிகளுடன் பிறந்த பாகிஸ்தான் குழந்தை… 60 லட்சத்தில் ஒரு அரிய நிகழ்வு!

“இப்படியான அரிதான நிலையில் குழந்தை பிறப்புடன் தொடர்புடைய முரண்பாடுகள் பெருமளவில் வேறுபடுவதால், அதன் காரணத்தைப் பற்றி எளிமையான, ஒரு விளக்கத்தை அளிக்க இயலாது” என்று சாரதா மருத்துவமனையின் எம்.டி டாக்டர் ஷ்ரே ஸ்ரீவஸ்தவ் கூறினார்.

diphallia, diphallia news, 2 ஆண் குறிகளுடன் பிறந்த பாகிஸ்தான் குழந்தை... 60 லட்சத்தில் ஒரு அரிய மருத்துவ நிகழ்வு, indianexpress.com, diphallia news, baby boy with two penises, no anus, what is diphallia
2 ஆண் குறிகளுடன் பிறந்த பாகிஸ்தான் குழந்தை… 60 லட்சத்தில் ஒரு அரிய மருத்துவ நிகழ்வு

ஒரு அரிய மருத்துவ நிகழ்வாக, பாகிஸ்தானில் இரண்டு ஆண் குறிகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தைக்கு ஆசனவாய் இல்லை. சர்ஜரி கேஸ் ரிப்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் ஜர்னலில் எழுதுகையில், ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த நிலையை டிஃபாலியா (diphallia) என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. இது 60 லட்சத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. இது முழுமையான அல்லது முழுமையற்ற டிஃபாலியாவாகக் காட்டப்படலாம் என்றும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிக்கலான சிறுநீரகம், இரைப்பை குடல் அல்லது அனோரெக்டல் குறைபாடுகளுடன் தொடர்புடையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையின் ஆண்குறிகள் ‘சாதாரண வடிவில்’ இருந்தாலும், ஒன்று மற்றொன்றை விட 1 செமீ பெரியதாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“குழந்தைக்கு இரண்டு தனித்தனி சிறுநீர்க்குழாய்கள் கொண்ட உண்மையான டிஃபாலியா இருந்தது. இரண்டு ஆண்குறிகளும் பாதிப்பு இல்லாமல் இருக்கிறது. ஒரு ஆண் குறி 2.5 செமீ நீளமும் இரண்டாவது ஆண்குறி 1.5 செ.மீ. நீளமும் இயல்பான இடத்தில் சிறுநீர்க்குழாய் திறப்புகளுடன் இயல்பான வடிவில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு மிட்லைன் ரேப் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட ரூஜ் உடன் குழந்தைக்கு ஒற்றை விதைப்பை இருந்தது. குழந்தை இரு ஆண் குறியின் துவாரங்களிலிருந்தும் சிறுநீர் கழித்தது. சிறுநீரக அமைப்பின் ஸ்கேன் படம் இரண்டு சிறுநீர்க்குழாய்கள் மற்றும் ஒரு ஹெமி சிறுநீர்ப்பையைக் காட்டியது. குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஆசனவாய்க்கான பெருங்குடல் அடையாளம் காணப்பட்டது. டாக்டர்கள் கொலோனோஸ்கோபி மூலம் ஒரு திறப்பை உருவாக்கினர். இதனால், குழந்தை மலம் கழிக்க முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

டிஃபாலியா என்பது வழக்கத்திற்கு மாறான அரிதாக குழந்தை பிறக்கும் நிலை. அதாவது இரண்டு கட்டமைப்பு மற்றும் உடற்கூறியல் ரீதியாக தனித்தனி ஆண் குறி, டிஃபாலியா நோய்களின் ஸ்பெக்ட்ரம் இருப்பதால், அதற்கு பலதரப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

“இந்த குழந்தையைப் போலவே, நோயாளிக்கு அனோரெக்டல் குறைபாட்டுடன் டிஃபாலியா இருந்தது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிக்மாய்டு கோலோஸ்டமி கட்டப்பட்டது” என்று ஆய்வு கூறுகிறது.

“இதனுடன் தொடர்புடைய முரண்பாடுகள் பெருமளவில் வேறுபடுவதால், அதன் காரணத்தை ஒரு எளிய, ஒற்றை விளக்கத்தை கொடுக்க முடியாது. ஆனால், குழந்தை கருத்தரித்த மூன்றாவது மற்றும் ஆறாவது வாரங்களுக்கு இடையில், கருவில் உள்ள கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் இருந்து இது தொடங்குவதாகக் கருதப்படுகிறது” என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

ஆனால், தொடர்புடைய அசாதாரணங்களை நிராகரிக்க ஒரு முழுமையான மதிப்பீடு தேவை என்று பெங்களூரு, ஒயிட்ஃபீல்டு சிறுநீரகவியல், ஆலோசகர் மணிப்பால் மருத்துவமனை டாக்டர் ஸ்ரீனிவாஸ் ஆர்.பி. இரட்டை ஆணுறுப்பு அடிக்கடி இரட்டை சிறுநீர் பாதை, சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை மற்றும் செரிமான அமைப்பு உட்பட பல முரண்பாடுகளுடன் சேர்ந்துள்ளது. இது இரட்டை மற்றும் விரிந்த பெருங்குடலுடன் தொடர்புடையது என்பதால், அதை கண்டறிந்து அகற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.

டாக்டர் ஸ்ரீனிவாஸ், இரட்டை ஆண்குறி நிலை விவகாரம், பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் திகிலூட்டும் அல்லது பயமுறுத்துவதாகத் தோன்றலாம், குழந்தை சிறுநீர் கழிக்கும் வரை, அது அவசரப் பிரச்னை இல்லை என்று கூறினார்.

நோயின் அளவைப் பொறுத்து, இதுபோன்ற நிகழ்வுகளை கையாள்வது தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஸ்ரீவஸ்தவ், :மருத்துவ மற்றும் நெறிமுறைக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, செயல்படாத ஆண்குறியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதை உள்ளடக்கியதாக” ஒவ்வொரு நிகழின் பகுப்பாய்வின் அடிப்படையில் சிகிச்சை தொடங்கப்படுகிறது என்றார்.

குழந்தை சிறிது எடை அதிகரித்து, சில மாதங்களுக்குப் பிறகு, நிலையானதாக மாறியதும், எந்த சிறுநீர்க்குழாய் அகற்றப்பட வேண்டும் என்பதை மருத்துவர்கள் முழுமையாக மதிப்பீடு செய்யலாம் என்று டாக்டர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

“எந்த சிறுநீர்ப்பை அகற்றப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் தீர்மானிக்க முடியும், ஏனெனில், இரண்டு சிறுநீர்ப்பைகள் நீண்ட காலத்திற்கு பொருந்தாது. எனவே, இரண்டு சிறுநீரகங்களும் பொதுவான சிறுநீர்ப்பையில் சேரும் வகையில் சிறுநீர்ப்பைகளில் ஒன்று மற்றும் சிறுநீர்க்குழாய்களில் ஒன்று அகற்றப்பட வேண்டும். இது சிறுநீர் பாதையை அதன் வழக்கமான நிலைக்கு மீட்டெடுக்கும். கூடுதலாக, குட்டையான, குறைந்த வளர்ச்சியடைந்த ஆண்குறியை வெளியே எடுக்க வேண்டும்” என்று டாக்டர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

மேற்கூறிய வழக்கில், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய குழந்தையின் மீட்பு சீரற்றதாக இருந்ததால், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய இரண்டாவது நாளில் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மற்றும் பின்தொடர்வதற்கு அழைக்கப்பட்டார் என்று ஆய்வு குறிப்பிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pakistani baby born with 2 penises no anus rare condition

Best of Express