Advertisment

மீந்து போன இட்லி வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம்

மீந்து போன இட்லியை வைத்து இப்படி பக்கோட செய்ய முடியும். ரொம்ப சுவையாக இருக்கும். டீக்கு இதுதான் சரியான ஸ்நாக்ஸ் .

author-image
WebDesk
New Update
food

food

மீந்து போன இட்லியை வைத்து இப்படி பக்கோட செய்ய முடியும். ரொம்ப சுவையாக இருக்கும். டீக்கு இதுதான் சரியான ஸ்நாக்ஸ்

Advertisment

தேவையான பொருட்கள்

மீந்துபோன இட்லி – 4

நறுக்கிய வெங்காயம் – அரை கப்

பச்சை மிளகாய் – 1

இஞ்சி துண்டுகள் ஒரு இஞ்ச்

அரை டீஸ்பூன் சோம்பு

கொத்தமல்லி இலைகள் நறுக்கியது

ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி

கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி

தேவையான அளவு உப்பு

கடலை மாவு அரை கப்

செய்முறை : மீந்து போன இட்லியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, சோம்பு, கொத்தமல்லி இலைகள், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும், தொடர்ந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, கடலை மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து சூடான ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். தொடர்ந்து எண்ணெயில் பக்கோட போல போட்டு பொறித்து எடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment