ருசியான பால் பொங்கல். இப்படி செய்யுங்க. ஈசி ரெசிபி
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
2 டீஸ்பூன் நெய்
4 கப் பால்
150 கிராம் சர்க்கரை
2 ஸ்பூன் நெய்
10 முந்திரி பருப்பு
15 திராட்சை
கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
செய்முறை: பச்சரியை நன்றாக கழுவி, குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும். பால், 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும். 5 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சைகளை வறுத்து கொள்ளவும். இதை குக்கரில் சேர்க்கவும். தொடர்ந்து மீண்டும் நெய் சேர்க்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“