சுவையான பலாக்கொட்டை குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை-10
புளி- சிறிதளவு
சாம்பார் பொடி- ஒன்றரை டீஸ்பூன்
உப்பு- ஒன்றரை டீஸ்பூன்
பெருங்காயம்- 1 சிட்டிகை
அரிசி மாவு-1 டீஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம்- தேவையான அளவு
ஓமம்- சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதலில் புளி கரைச்சல் தயார் செய்யவும். அடுத்து கடாயில் பலாக்கொட்டைகளைச் சேர்த்து சூடாகும் வரை வறுக்கவும். பலாப்பழ கொட்டைகளின் வெளிப்புற தோலை அகற்றவும்.
ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டைகளை ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 2-3 விசில் விடவும்.
இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து பெருங்காயம் சேர்க்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் தூள் சேர்கக்வும். புளி கரைச்சல்,உப்பு சேர்க்கவும்.
அதன் பச்சை வாசனையை போக்க புளி சாற்றை 5 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பலாப்பழ கொட்டைகளையும் சேர்த்து கொதிக்க விடவும். அவ்வளவு தான் பலாக்கொட்டை குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“