/indian-express-tamil/media/media_files/2025/05/05/PE0cHdyvAnLWNEozagmQ.jpg)
Palaruvi kerala
பாலருவி, கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய அருவி. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த அருவி, அடர்ந்த வனப்பகுதியின் நடுவே வெண்மையான பால் போன்ற நுரையுடன் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இந்த பெயர் வந்தது.
குற்றாலத்துக்கு வரக்கூடிய பயணிகள், அருகில் உள்ள கேரள மாநிலத்தின் ஆரியங்காவு பகுதியின் பாலருவிக்குச் சென்று குளிப்பது வழக்கம். உயரத்தில் இருந்து கொட்டும் பாலருவியில் குளிப்பது புத்துணர்வை ஏற்படுத்தும்.
சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, காண்போரை மயக்கும் இயற்கை எழில்கொஞ்சும் காட்சியாகும். பாறைகளின் மீது பட்டுச் சிதறும் நீர், மெல்லிய தூறலாக காற்றில் கலந்து இதமான குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்த இப்பகுதி, பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது.
இதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், அமைதியான சூழலில் இளைப்பாறுவதற்காகவும் ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, அருவியின் கீழே இயற்கையாக அமைந்துள்ள சிறிய குளத்தில் குளிப்பது மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும்.
இந்த அருவிக்கு அருகில், பழமையான ஆரியங்காவு ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இதுவும் இப்பகுதிக்கு வரும் பக்தர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய ஸ்தலமாகும். கோயில் மற்றும் அருவியின் அமைதியான சூழல் ஆன்மீகத்தையும் இயற்கையையும் ஒருங்கே விரும்புபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
பாலருவியை அடைவதற்கு சாலை வசதிகள் உள்ளன. கொல்லம் மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் எளிதாக இப்பகுதியை அடையலாம். எனினும், வனப்பகுதிக்குள் நடந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். கேரள சுற்றுலாத் துறையின் மூலம் இப்பகுதி நன்கு பராமரிக்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய அம்சங்களில் ஒன்றான பாலருவி, இயற்கை விரும்பிகளுக்கும், அமைதியை நாடுவோருக்கும், சுற்றுலாப் பிரியர்களுக்கும் ஒரு சிறந்த டெஸ்டினேஷன் ஆக விளங்குகிறது.
இந்த சம்மர்ல குற்றாலம், கேரளா போறீங்கனா இந்த அருவிய மிஸ் பண்ணாதீங்க!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.