Palkova in tamil, Srivilliputhur palkova making video: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு பதார்த்தம் என்றால், அது பால்கோவா தான்! அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் டேஸ்டே தனி! ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை அதே டேஸ்டில் வீட்டில் செய்ய முடியுமா?
Advertisment
முடியும்! கீழ்கண்ட வழிமுறையைப் பின்பற்றி பால்கோவாவை வீட்டில் தயாரித்து குடும்பத்தினரை குதூகலப்படுத்துங்கள். விருந்தினர்களுக்கும் கொடுத்தால் நிச்சயம் உள்ளம் மகிழ்வார்கள். பால், சீனி என இரண்டே பொருட்களில் சுவையான பால்கோவா செய்துவிடலாம்.
Srivilliputhur palkova making video: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்யும் முறையைப் பார்க்கலாம்.
Advertisment
Advertisements
பால்கோவா செய்யத் தேவையான பொருட்கள்: பால் - 10 லிட்டர், சர்க்கரை - 1/2 கிலோ.
செய்முறை: சுத்தமான தண்ணீர் கலக்காத பால் 10 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி, சூடு படுத்துங்கள். பாலை அடுப்பில் வைத்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பால் அடியில் பிடித்து விடும். அதன் மூலமாக பால்கோவாவின் நிறம் மற்றும் சுவை மாறி விடும்.
இப்படியே சுமார் 20 நிமிடம் பாலை மட்டும் கிண்டி கொண்டிருக்க வேண்டும். பால் சூடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சர்க்கரையை பாலில் போட்டு மறுபடியும் கிண்ட வேண்டும். சுமார் 15 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இப்போது பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இளகிய நிலையை அடையும்.
தொடர்ந்து கிண்டினால் நல்ல மணமுடன் கூடிய சுத்தமான பால்கோவா கிடைக்கும். நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாலை இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த முறையில் பால்கோவா தயார் செய்து மகிழுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"