டாக்டர் சிவராமன் வீட்டு திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், இந்த ஸ்வீட்டைத்தான் செய்து அசத்தி உள்ளார். நீங்கள் இதை செய்து சாப்பிடுங்க
தேவையான பொருட்கள்
பருத்திக்கொட்டை 2 கப்
250 கிராம் வெல்லம்
1 கப் முதல் தேங்காய் பால்
1 கப் இரண்டாம் தேங்காய் பால்
2 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் பாதாம்
2 ஸ்பூன் முந்திரி
செய்முறை: நாம் பருத்திக்கொட்டையை நன்றாக கழுவி அரைத்துகொள்ளவும். இதை பிழிந்து பருத்து பாலை எடுக்கவும். தொடர்ந்து மீண்டும் ஒருமுறை வடிகட்டி பாலை எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பருத்தி பாலை சேர்த்து பாதி அளவிற்கு மாற்ற வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். தொடர்ந்து பருத்தி பாலில் சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து முதல் தேங்காய் பாலை ஊற்றி கிளரவும். தொடர்ந்து இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி கிளரவும். தொடர்ந்து நெய்யில் வதக்கிய பாதம், முந்திரியை சேர்த்து கிளரவும்.