சமையலுக்கு ரேஷன் பாமாயில் யூஸ் பண்ணுறீங்களா? இதய நோயாளிகள் இருந்தா இத நோட் பண்ணுங்க!

இதில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பாமாயில் குறித்து சிலர் கெடுதலான எண்ணெய் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு ஆகும்.

இதில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பாமாயில் குறித்து சிலர் கெடுதலான எண்ணெய் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு ஆகும்.

author-image
Mona Pachake
New Update
download - 2025-10-07T181606.658

பாமாயில் என்பது பல வீட்டுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும். குறிப்பாக ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பாமாயிலை நம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாக இருக்கிறது. ஆனால், அதிகமாக பாமாயிலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்துமோ? இதற்கு பலர் கவலைப்படுகிறார்கள். இந்தப் பதிவில் பாமாயில் மற்றும் அதனுடைய உடல் நலத்திற்கு விளைவுகள் பற்றி விரிவாக ஆராய்கிறோம்.

Advertisment

பாமாயில் என்பது பெரும்பாலும் பதப்படுத்தப்படும் உணவுகளில்  பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒன்றாகும். நீங்கள் சந்தையில் வாங்கும் பிஸ்கட், சிப்ஸ், பக்கெட் வகை ஸ்நாக்ஸ்களில் பாமாயில் அதிகமாக இருக்கும். ரேஷன் கடைகளிலும் பாமாயில் வழங்கப்படுகிறது, அதனை வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதோடு, மார்க்கெட்டில் இருக்கும் பல தயாரிப்புகளிலும் இது கலந்திருக்கும்.

cooking oil

பாமாயில், செம்பனை எனப்படும் மரத்தின் பழத்திலிருந்து பிரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய், பனை மரத்தின் பழத்தின் சதைப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு மாறாக, பழத்தின் மையப்பகுதியில் உள்ள கொட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய் பாம் கர்னல் ஆயில் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பாமாயிலை உணவு பொருட்களில் அதிகமாகப் பயன்படுத்துவார்கள், பாம் கர்னல் ஆயில் காஸ்மெட்டிக் பொருட்களில் பயன்படுகிறது.

இதில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பாமாயில் குறித்து சிலர் கெடுதலான எண்ணெய் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு ஆகும்.

Advertisment
Advertisements

மனித உடலில் கொழுப்பு அவசியமானது. அது எரிசக்தி வழங்குவதோடு செல்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்புகள் நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதில் நிறைவுறா கொழுப்பு உடலுக்கு நன்மை தரும், ஆனால் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகமாகச் சேரும்போது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படைந்து, இதய நோய்கள், ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

cooking oil

பாமாயில் மாதிரி தேங்காய் எண்ணெய்யிலும் அதிகமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய் 80%, வெண்ணெய் 51%, நெய் 60% நிறைவுற்ற கொழுப்பு கொண்டவை. இதனால், பாமாயில் மட்டுமல்லாமல், நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களிலும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதை கவனிக்க வேண்டும். விலை மலிவாக இருப்பதால் பாமாயில் அதிகமாக பயன்படுகிறது, இது கூடுதலாக உட்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

பாமாயில் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவது அவ்வளவு அல்ல; ஆனால் அதனை அதிகமாக பயன்படுத்துவதுதான் பிரச்சனையாகும். மேலும், பாமாயில் மிகுந்த பதப்படுத்துதல் மூலம் சத்துக்கள் சில நீக்கப்படுகின்றன. எனவே, வீட்டில் பயன்படுத்தும் அளவு பரவாயில்லை என்றாலும், கடைகளில் அடிக்கடி உணவு சாப்பிடும் பழக்கத்திலிருந்து விலகுவது உடலுக்கு நன்மை தரும்.

முடிவாக..

பாமாயில் தன் தன்மையில் தீங்கு செய்யாது; அதனை அளவுக்கு மீறி உண்பதுதான் சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, உணவு பழக்கங்களில் கவனம் வைத்து, சீரான மற்றும் சமநிலை கொண்ட உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: