Advertisment

மார்ச் 31 மறந்துடாதீங்க : பான்கார்டு - ஆதார் இணைப்புக்கான இறுதி நாள்

நிரந்தர கணக்கு எண் (PAN) எனப்படும் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பது கட்டாயமாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PAN-Aadhaar March 31 deadline,PAN-Aadhaar link deadline,PAN-Aadhaar link,PAN-Adhaar I-T department,PAN-Aadhaar deadline

PAN-Aadhaar March 31 deadline,PAN-Aadhaar link deadline,PAN-Aadhaar link,PAN-Adhaar I-T department,PAN-Aadhaar deadline

நிரந்தர கணக்கு எண் (PAN) எனப்படும் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பது கட்டாயமாகும். இதுவரை இவ்விரண்டு ஆவணங்களையும் இணைக்காதவர்கள், நிர்ணயிக்கப்பட்ட மார்ச் 31 என்ற காலக்கெடுவுக்குள் இவ்விரண்டு ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மார்ச் 31 க்குள் இவ்விரண்டு ஆவணங்களையும் இணைக்காவிட்டால் பான் அட்டை செயலிழந்துவிடும் என கடந்த மாதம் வருமான வரித்துறை கூறியுள்ளது. பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை Biometric Aadhaar authentication மூலமாகவோ அல்லது NSDL மற்றும் UTITSL ன் பான் சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ இணைத்துக் கொள்ளலாம் என வருமான வரித்துறை தனது தெரிவித்துள்ளது.

Twitter handle @IncomeTaxIndia, என்ற தனது டிவிட்டர் கணக்கில் ஒரு வீடியோவுடன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் வருமான வரித்துறை இவ்விறு ஆவணங்களின் இணைப்பு நாளை நன்மை பயக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில் இவ்விரண்டு ஆவணங்களையும் இணைக்க இரண்டு வழிகள் உள்ளதாக குறுப்பிடப்பட்டுள்ளது.

567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN12இலக்கஆதார்>10இலக்கபான் எண் என குறுஞ்செய்தி அனுப்பவும்.

Send SMS to 567678 or 56161 in the format: UIDPAN12digit Aadhaar>10digitPAN>

அல்லது துறையின் e-filing portal வழியாக www.incometaxindiaefiling.gov.in. இணைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் கொள்கைகளை வடிவமைக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes CBDT) இந்த இரண்டு ஆவணங்களின் இணைப்புக்கான காலக்கெடுவை எட்டாவது முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி நீட்டித்தது.

உச்சநீதிமன்றமும் கடந்த செப்டம்பர் 2019 ல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆதார் திட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் எனக் கூறி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும் பான் எண் ஒதுக்கவும் biometric ID ஆன ஆதார் கட்டாயமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ஜனவரி 27 வரை 30.75 கோடி பான் அட்டைகள் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் 17.58 கோடி பான் அட்டைகள் இன்னும் ஆதாருடன் இணைக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Pan Card Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment