சுவையான, ஆரோக்கியமான பனங்கிழங்கு லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பனங்கிழங்கு – 6
துருவிய தேங்காய் – 1 கப்
நாட்டுச்சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் – 2
செய்முறை
பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, நார் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அவற்றை ப்ரிஜ்ஜில் வைக்கவும். இதனால் பனங்கிழங்கின் பிசுபிசுப்புத் தன்மை நீங்கும்.
அரை மணி நேரம் கழித்து ப்ரிஜ்ஜில் இருந்து வெளியே எடுத்து, அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். அதை பாத்திரத்தில் போடவும். இப்போது பனங்கிழங்கு மாவுடன் தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். அவ்வளவு தான் சுவையான பனங்கிழங்கு லட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“