/tamil-ie/media/media_files/uploads/2021/03/Artup.jpg)
Pandavar Illam Arthi Subash Skincare routine
Pandavar Illam Arthi Subash Skincare routine : யூடியூப் சீரிஸில் தொடங்கி தற்போது சன் டிவியின் பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அனைத்து தமிழ் மக்களின் வீடுகளில் மல்லிகாவாக அறியப்படும் ஆர்த்தி சுபாஷ்சுபாஷை எப்போதும் எளிமையான மேக்-அப்பில் மட்டுமே காணமுடியும். எப்போதும் தன் அம்மாவோடு இணைந்திருக்கும் ஆர்த்தி, சமீபத்தில் அவருடன் இணைந்து ஓர் தனியார் சேனலில் சரும பராமரிப்பு வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார். மகள் ட்ரெண்டி பொண்ணு என்றால் அம்மா அப்படியே ட்ரெடிஷனல்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Art1.png)
"காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிட்டு, மாய்ச்சரைசர் உபயோகப்படுத்துவேன். சருமப் பராமரிப்பு என்று வந்துவிட்டாலே மாய்ஸ்ச்சரைசர் மிகவும் முக்கியமான பொருள். இதனைத் தொடர்ந்து சன்ஸ்க்ரீன் லோஷன் போடுவேன். உங்கள் சருமத்திற்கு ஏற்ற எஸ்.பி.எஃப் லெவல் சரிபார்த்து வாங்குவது அவசியம். நான் எஸ்.பி.எஃப் 50-க்கு மேல் இருப்பதுபோல்தான் வாங்குவேன்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Art3.png)
அடுத்தது சீரம் அல்லது ப்ரைமர். அப்புறம்தான் மேக்-அப் போடுவேன். மேக்-அப் போடுவதைவிட அதனை அகற்றுவதுதான் பெரிய வேலை. அகற்றுவதற்கு மிசெல்லார் தண்ணீர் உபயோகப்படுத்துவேன். அதற்கு அடுத்தபடியாக பருக்களை அகற்றும் ஸ்ப்ரே. இதற்கு அப்புறம் மாய்ஸ்ச்சரைசர் அப்லை செய்துவிட்டுப் படுக்கச் சென்றுவிடுவேன். எனக்குத் தனிப்பட்ட வகையில் என் சரும மருத்துவர் பரிந்துரைத்த மிசெல்லார் தண்ணீர் மற்றும் ஸ்ப்ரேக்களை மட்டுமே உபயோகப்படுத்துவேன்" என்று முடிப்பதற்குள் ஆர்த்தியின் தாய் சில எளிய ஹோம் ரெமடிகளை பகிர்ந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Art4.png)
"காலையில் கற்றாழையை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளிப்பேன். வாரத்தில் ஒரு முறை கடலை மாவு தயிரும் கலந்து முகத்தில் அப்லை செய்து கழுவுவேன். இரவு தூங்குவதற்கு முன் கண்டிப்பாக முகத்தைக் கழுவுவேன். அவ்வளவுதான் என்னுடைய ரொட்டின்" என்று சட்டென டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.