Pandavar Illam Kayal Papri Ghosh Saree Collection Lifestyle Tamil : சீரியல் பிரியர்கள் பலருக்கும் நிச்சயம் ‘பாண்டவர் இல்லம்’ தொடர் பிடிக்கும். கணவன் – மனைவி இணைந்து இருந்தாலே கூட்டுக் குடும்பம் என உருவெடுத்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஐந்து சகோதரர்கள் ஒற்றுமையாக ஒரே வீட்டில் தங்களின் குடும்பத்தோடு இணைந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் தொகுப்புதான் பாண்டவர் இல்லம். இதில் பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஃபேவரைட் ‘கயல்’. கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட இவருடைய இயற்பெயர் பாப்ரி கோஷ். விதவிதமான சூப்பர் புடவைகள் அணிந்து வரும் பாப்ரியின் ஷாப்பிங் பேட்டர்னை கேட்டால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள்.

“ஷாப்பிங் பொறுத்த வரைக்கும் நான் ரொம்ப ரொம்ப கஞ்சூஸ். சென்னையில் நான் எப்போதுமே சௌகார்பேட்டையில்தான் என்னுடைய உடைகளை வாங்குவேன். மாதத்திற்கு ஒருமுறை எப்படியும் அங்குச் சென்றுவிடுவேன். குறைந்தது 20 புடவைகளையாவது வாங்கிவிடுவேன். அதுலயும், மற்றவர்களைப்போல் நாலைந்து கடைகள் ஏறி இறங்குவதெல்லாம் கிடையாது. ஒரே கடைதான். அந்தக் கடையிலேயே மொத்த பர்சேசையும் முடித்துவிடுவேன்.
நாயகி தொடரில் 100 ரூபாய் புடவையெல்லாம் கட்டியிருக்கேன். ஆனால், பாண்டவர் இல்லம் தொடரில் பணக்கார வீட்டு மருமகளாச்சே. அதனால், 200, 300 ரூபாய் புடவைகள்தான் வாங்குகிறேன். மனசே வலிக்குது. ஒருமுறைகூட 1000 ரூபாய்க்கு மேல் வாங்கியதில்லை, வாங்கவும் மாட்டேன். அதுலயும் சலுகைகள் இல்லாமல் நிச்சயம் வாங்க மாட்டேன்.

என்னுடைய திருமணத்திற்கும் அப்படிதான் என்னுடைய உடைகளெல்லாம் வாங்கினோம். அதேபோல தனியாக எப்போதுமே ஷாப்பிங் போகமாட்டேன். பெரும்பாலும் என் தங்கையைத்தான் கூட்டிட்டு போவேன். சென்னையைவிடக் கொல்கத்தாவில் நிறைய ஷாப் பண்ணுவேன். என்னைப் புடவையில்தான் மக்கள் பெரும்பாலும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு கவுன், ஸ்கர்ட்ஸ்தான் பிடிக்கும்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil