scorecardresearch

கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர்… பாண்டவர் இல்லம் கயல் அழகு ரகசியம்

Pandavar Illam Papri Ghosh Beauty Secrets பாப்ரியின் பளபளக்கும் சருமத்திற்குக் காரணம் உடற்பயிற்சிதானாம்.

Pandavar Illam Papri Ghosh Beauty Secrets Skincare Tips Tamil
Pandavar Illam Papri Ghosh Beauty Secrets

Pandavar Illam Papri Ghosh Skincare Tips Tamil : வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சமீபத்தில் திருமணமாகியிருக்கும் பாப்ரி கோஷுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் குறிப்பாக, அவருடைய கொஞ்சும் தமிழுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாண்டவர் இல்லம் தொடர் மூலம் தினம் தினம் தமிழ்நாட்டு மக்களை சந்திக்கும் பாப்ரியின் பளபளக்கும் சருமத்திற்குக் காரணம் உடற்பயிற்சிதானாம். மேலும், பல டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார்.

Papri Ghosh Pandavar Illam Kayal Photos

“காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி செய்தாலே சருமம் சீரானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எந்த அளவிற்கு சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு உடற்பயிற்சியும் முக்கியம். அதேபோல தண்ணீர் நிறையக் குடிப்பேன். கோவம் நிறைய வரும் என்பதாலேயே நேரத்திற்குச் சாப்பிட்டு முடித்துவிடுவேன். இருப்பதை வைத்துக்கொண்டு முடிந்த அளவிற்கு சந்தோஷமாக இருப்பேன். அவ்வளவுதான் என்னுடைய ரொட்டின்” என்பவர் முகப்பொலிவுக்கான ஃபேஸ் பேக் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

Papri Ghosh without Make-up

“முகத்திற்கு சந்தன ஃபேஸ் பேக் மிகவும் சிறந்தது. அதேபோல கஸ்தூரி மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்லை செய்து பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக மாறும். முடிந்த அளவிற்கு என்னுடைய சருமத்தையும் முடியையும் தொல்லை செய்ய மாட்டேன். தேவைப்படும்போது மட்டும் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவேன்.

டயட் பொறுத்தவரைக்கும், க்ரீன் டீ சாப்பிடுவேன். அதேபோல பால் அவசியம் எடுத்துக்கொள்வேன். மேக்-அப் பக்கம் அதிகமாகப் போகமாட்டேன். என்னுடையது எண்ணெய் சருமம் என்பதால், மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கத் தேவையே இல்லை. ஆனால், முகத்தை அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருப்பேன். அது மிகவும் முக்கியம்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pandavar illam papri ghosh beauty secrets skincare tips tamil