பாண்டியன் ஸ்டோர்ஸ் நினைவலையில் சுஜிதா – லட்சக்கணக்கான வியூஸ் பெரும் வைரல் வீடியோ!

Pandian Stores Actress Sujitha Dhanam Youtube Channel அவர்களுடைய உரையாடல்களையும் மக்கள் கேட்கும்படி ஸ்பீக்கரில்தான் பேசினார் சுஜி.

Pandian Stores Actress Sujitha Dhanush Dhanam Youtube Channel Tamil
Pandian Stores Actress Sujitha Dhanush Dhanam Youtube Channel Tamil

நீண்ட நாள்களாக டிஆர்பி-ல் டாப் இடத்தில் இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சுஜிதா. இவர்கள் திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஒற்றுமையாக, ஒன்றாகவே வாழ்பவர்கள். ஆனால், இந்த லாக்-டவுன் அவர்களைப் பிரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் சுஜாதாவிற்குக் கனவு வந்து டிஸ்டர்ப் செய்கிற அளவிற்கு அவருடைய குழுவை மிகவும் மிஸ் செய்கிறார்.

‘கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில், தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்திருக்கிறார் சுஜி. பெயருக்கு ஏற்றதுபோல, சிறுவர்களுக்கான கதைகள் ஏராளமாய் இவருடைய பக்கத்தில் இருக்கின்றன. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் விசிட், திருவிழா கொண்டாட்டங்கள், ரெசிபிஸ் என பல்வேறு விதமான காணொளிகளும் இவருடைய சேனலில் உண்டு. அதில், சமீபத்தில் லாக்-டவுனில் தன்னுடைய காலைப் பொழுதை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதைப் பதிவு செய்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமோடு டீ சாப்பிடுவது போன்றும், ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்றும் கனவு வந்திருக்கிறது சுஜிதாவிற்கு. அதனால், தன்னுடைய ரீல் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு போன் செய்து பேசலாம் என்று நினைத்தவர், யாருக்குக் காலையிலேயே போன் போட்டு டிஸ்டர்ப் செய்வது என்பதில் குழப்பம்.

முந்தைய நாள்தான் குமரனுடன் பேசியிருந்தாராம். அதனால், அவருக்கு போன் போடவில்லை. ஹேமா உறங்கிக்கொண்டிருப்பாராம். அதனால் அவருக்கும் போன் செய்யவில்லை. இறுதியாக, தன்னுடைய அண்ணி கதாபாத்திரத்தின் கம்பம் அக்காவை அழைத்துப் பேசினார். பிறகு, கடைக்குட்டி கண்ணனுக்கு. அவர்களுடைய உரையாடல்களையும் மக்கள் கேட்கும்படி ஸ்பீக்கரில்தான் பேசினார் சுஜி.

அடுத்ததாக தன்னுடைய க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங் என சரும பராமரிப்பு செயல்முறையை முடித்துக்கொண்டு, வீட்டிற்குப் பக்கத்திலேயே நடைப்பயிற்சிக்குச் சென்றார். ஆனால், அங்கு என்னவோ போட்டோஷூட்தான் நடந்தது. சுஜிதா கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். அதனால், தனிப்பட்ட வகையில் ஏராளமான மைதானங்களைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

பிறகு குப்பைகளைச் சரியான இடத்தில்தான் வெளியேற்றவேண்டும் என்கிற குறிப்போடு, காய்கறி மற்றும் பழங்கள் வாங்க விரைந்தார். சாதாரண சாலையோர கடையிலேயே தன்னுடைய பழங்கள் மற்றும் காய்கறி பர்சேஸிங்கை முடித்துக்கொண்டு, வீடு திரும்பினார். வீட்டை அடைந்ததும், வாசல் தெளித்து கோலம் போட்டார். சிறிய கோலம் என்றாலும், வாசல் முன் கோலம் என்றாலே அழகுதான். இந்த காணொளி தற்போது 2.2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores actress sujitha dhanush dhanam youtube channel tamil

Next Story
“என்னை நானே முதலில் ரசித்த தருணம் அதுதான்” – ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் பெர்சனல்ஸ்!Bharathi Kannama Serial Actress Roshni Haripriyan Personals Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com