‘மூன்று தம்பிகளும் பாப்பாவை நல்லா பார்த்துப்பாங்க’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தை பேட்டி எடுத்த சுஜி!

Pandian Stores Dhanam meets Sujitha Dhanush பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து பேசுறேன் என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. என் வீட்டுப் பக்கத்தில் காமாக்ஷி ஸ்டோர்ஸ்தான் இருக்கிறது என்றேன்.

Pandian Stores Dhanam meets Sujitha Dhanush Youtube Channel Tamil
Pandian Stores Dhanam meets Sujitha Dhanush Youtube Channel Tamil

Pandian Stores Dhanam meets Sujitha Dhanush Youtube Channel Tamil: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ‘தனம்’ எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. சிறு வயதிலிருந்தே ஏராளமான திரைப்படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் சுஜிதா, சொந்தமாக யூடியூப் சேனலையும் ஆரம்பித்திருக்கிறார். ‘கதைகேளு கதைகேளு’ என்றும் இவருடைய சேனலில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். அதில் சமீபத்தில் அவர் பதிவேற்றிய வித்தியாச காணொளி 3 லட்ச வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில்?

சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரமான தனத்தை பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்? இதுதான் அந்த காணொளியில் கான்செப்ட். மேக்-அப், கெட்-அப் முதல் குரல், ஸ்லாங் வரை அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்டி, எடிட்டிங்கில் பக்காவாக மேட்ச் செய்திருக்கும் இந்த காணொளியில் இருவரும் ஏராளமான விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

நீண்ட நாள் கழித்து கருவுற்றிருக்கும் தானம் எப்படி இருக்கிறார் என்பது தொடங்கி, ஏற்கெனவே 2 3 கொழுந்தன்களை மகன் போல வளர்த்து வந்த தனத்திற்கு, தனக்கென குழந்தை பிறந்துவிட்டால், தம்பிகளின் மீது பாசம் குறைந்துவிடுமா உள்ளிட்ட பல கேள்விகளை அடுக்கினார் சுஜி. அதற்கு, “தாய்மை என் வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம். இது என் வாழ்க்கையில் எனக்கு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டு இருந்தேன். என் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறியுள்ளது. இந்த சந்தோஷத்தை என்னால வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

என்னுடைய கொழுந்தன்கள், அதான் என் தம்பிகள் அனைவரும் என்னுடைய முதல் குழந்தைகள்தான். ஆனால், நான் சுமப்பது என்னுடைய உயிர். எனக்கென குழந்தை பிறந்ததற்குப் பிறகு நிச்சயம் பாசம் குறையாது. சொல்லப்போனால், அவர்கள் அனைவரும் என்னுடைய பாப்பாவை எப்படி கவனித்துக்கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பில் மிதந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எப்போதும் பாசம் குறையவே குறையாது” என்று தன் பதில்களை முன்வைத்தார் தனம்.

இப்போது தானம், சுஜியிடம் கேள்விகளைத் தொடுத்தார். முதல் நாள் ஷூட் அனுபவம், ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ் முதல் தன்னுடைய மகன் எந்த அளவிற்கு சுஜியை மிஸ் செய்கிறான் வரை ஏராளமான கேள்விகளை அடுக்கினார். அதற்கு,

“இந்த சீரியலில் நான் கமிட் ஆனபோது, டைட்டில் எதுவும் வைக்கவில்லை. பிறகு ஒரு நாள், இந்த சீரியலின் அசோசியேட் பேசியபோது, பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து பேசுறேன். ஷூட்டிங்க்கு வாங்க என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. என் வீட்டுப் பக்கத்தில் காமாக்ஷி ஸ்டோர்ஸ்தான் இருக்கிறது என்றேன். அதன்பிறகு அவர் தெளிவாக விளக்கம் கொடுத்தபிறகுதான் இந்த சீரியலின் பெயர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று எனக்குத் தெரியும்.

முதல் நாள் ஷூட்டிங்கில் நானும் ஸ்டாலின் அண்ணனும் மட்டும்தான் இருந்தோம். முதலிரவில் நமக்கு குழந்தை வேண்டாம் என்று பகிர்ந்துகொள்ளும் கஷ்டமான சீன்தான் முதலில் எடுக்கப்பட்டது. ஸ்டாலின் அண்ணா மற்றும் வெங்கட் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால், சித்ரா, குமரன், கண்ணன் என மற்ற அனைவரும் வந்த முதல் நாளிலேயே நல்லா பழகிட்டாங்க. இப்போது அனைவரும் இன்னொரு குடும்பம் போல்தான் இருக்கிறோம்.

எனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் குடும்பத்தோடு இருக்கத்தான் மிகவும் பிடிக்கும். திருமணத்திற்கு முன்பு அம்மா, அப்பா, சகோதர, சகோதரர்களோடு இருந்தேன். இப்போது கணவர், மகன் என என் உலகமே இவர்கள்தான் என்றிருக்கிறேன். என்னுடைய மகன் தன்வின் என்னை மிகவும் மிஸ் செய்தாலும், எனக்காக ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணிக்குறான்” என்று நிறைவு செய்தார் சுஜி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores dhanam meets sujitha dhanush youtube channel tamil

Next Story
உருளைக்கிழங்கு ரகசியம்… சாஃப்ட் சப்பாத்திக்கு இப்படியும் வழி இருக்கு!Chapati Recipe in Tamil, potato using for Soft Chapati Recipe, சப்பாத்தி, சாஃப்ட் சப்பாத்தி, உருளைக்கிழங்கு, சாஃப்ட் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, சப்பாத்தி மாவு, Soft Chapati Recipe, potato using tips for soft chapati making, how to making soft chapati, sappathi, chappathi, soft chapati, buff chapati, chapati flours
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X