சூரிய நமஸ்காரம், க்ரீன் டீ, இட்லி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஸ்பெஷல் டயட் டிப்ஸ்!

Pandian Stores Dhanam Sujitha Diet Youtube Viral Video Tamil News பிறகு மாலை வேளையில் எனக்கு மிகவும் பிடித்த டீ. 6.30 மணிபோல இரண்டு இட்லி, சப்பாத்தி சாப்பிடுவேன்.

Pandian Stores Dhanam Sujitha Diet Youtube Viral Video Tamil News
Pandian Stores Dhanam Sujitha Diet Youtube Viral Video Tamil News

Pandian Stores Dhanam Sujitha Diet Youtube Viral Video Tamil News : முக்கிய கதாபாத்திரம் மாற்றம் மற்றும் முடிவு எனப் பல விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இதில் குடும்பத்தின் மூத்த மருமகளாக நடிக்கும் சுஜிதா, ‘கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில் தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனலை வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் ஓர் தளமாக இருந்தது. பிறகு Vlog முதல் அழகுக் குறிப்புக்கள் வரை ஏராளமான தலைப்புகளில் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் சுஜி. அந்த வரிசையில் சமீபத்தில் தன்னுடைய எடை குறைப்புக்கான சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார்.

“தினமும் வேலைக்காக அவசர அவசரமாக ஓடுகிறோம். இந்த பிஸியான வேலைகளுக்கு மத்தியில், நம்மை நாம் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். ஜிம் எல்லாம் சென்று பெரிதாக நம்மை நாம் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், நம்மால் முடிந்த சின்னசின்ன விஷயங்களை செய்வதன் மூலம் நம் உடல் எடையை சரியாகப் பார்த்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் நான் என்னவெல்லாம் செய்கிறேன் என்பதை இந்த காணொளியில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்” என்பதோடு இந்த பயனுள்ள காணொளி தொடங்குகிறது. “காலை எழுந்ததும்  ஓர் க்ளாஸ் சுடுதண்ணீரில், எலுமிச்சை, ஆப்பிள் சைடர் மற்றும் தேன் கலந்து குடிப்பேன். இதன் பிறகு 40 நிமிட நடைப்பயிற்சி நேரம் இருந்தால் மட்டுமே செய்வேன். நிறைய நாட்கள் அதைச் செய்யமுடியாமல் போகும். ஆனால், சூரிய நமஸ்காரம் நிச்சயம் செய்வேன்.

அதன்பிறகு குளித்து, ஷூட்டிங் சென்றால் அங்கு அடிக்கடி சுடுதண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பேன். அப்போதுதான் நாம் என்ன, எவ்வளவு சாப்பிட்டாலும் ஜீரணமாகிவிடும் என்கிற ஒரு நிம்மதி வரும். பிறகு, க்ரீன் டீ குடிப்பேன். மதிய வேளையில் நிறைய சாப்பிடுவேன். முடிந்த அளவுக்கு நிறையக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வேன். அடுத்தது லெமன் டீ. பிறகு மாலை வேளையில் எனக்கு மிகவும் பிடித்த டீ. 6.30 மணிபோல இரண்டு இட்லி, சப்பாத்தி சாப்பிடுவேன். அவ்வளவுதான் அதன்பிறகு எதுவும் சாப்பிடவே மாட்டேன். எப்போதாவது ரொம்ப சாப்பிடணும் போல தோன்றினால் ஒரு க்ளாஸ் பால் குடிப்பேன். மற்றபடி இந்த வழக்கத்தைப் பின்பற்றுவதால், எனக்குப் பசிக்கவும் பசிக்காது.

என்றபடி இந்த எடை குறைப்பு டிப்ஸ் பகுதியை நிறைவு செய்து, பிறகு ஓர் அம்மாவாக தன் மகனோடு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார் என்பதைப் பகிர்ந்துகொண்டு, இறுதியாகக் குழந்தைகளுக்கான கதை ஒன்றையும் கூறி நிறைவு செய்கிறார் சுஜி.ஏராளமான சுவாரசிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த காணொளி 2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை தாண்டிச் சென்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores dhanam sujitha diet youtube viral video tamil news

Next Story
இதுக்கு தான் காலைப்பொழுதை நட்ஸூடன் ஆரம்பிக்க சொல்றாங்களாம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com