/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sujup.jpg)
Pandian Stores Dhanam Sujitha Kadhaikelu Kadhaikelu Youtube Channel
Pandian Stores Dhanam Sujitha Kadhaikelu Kadhaikelu Youtube Channel : பிரபலங்கள் பலரும் தங்களுக்கென தனிப்பட்ட யூடியூப் சேனலை திறந்து, தங்களின் அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை பதிவேற்றுகின்றனர். அந்த வரிசையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதாவின் சேனல் சற்று வித்தியாசமானது. 'கதைகேளு கதைகேளு' எனும் பெயருக்கு ஏற்றதுபோல ஏகப்பட்ட கதைகளை தன்னுடைய சேனலில் பதிவு செய்திருக்கிறார்.
லாக் டவுனை தொடர்ந்து வீட்டிலிருக்கும் நேரத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று நினைத்த சுஜிதா, தன் மகனுக்குச் சொல்லும் கதைகளை ஏன் பொது மக்களுக்கும் சொல்லக்கூடாது என்று நினைத்திருப்பார் போல. சிறுவர்களுக்கான தெனாலிராமன், ஒளவையார் கதைகள் முதல் நீதிக்கதைகள் வரை ஏராளமான பல சுவாரசிய கதைகளைக் கூறி பதிவு செய்திருக்கிறார் சுஜி.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Suji1-1.png)
அதுமட்டுமில்லாமல், லாக் டவுன் முடிவடைந்து சீரியல் ஷூட் ஆரம்பித்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட், அங்கு நடக்கும் கலாட்டாக்கள், சுஜிதா எப்படி தனமாக மாறுகிறார் என்பதற்கான மேக்-அப் வீடியோ, சரும பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட பல Vlog வகையான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
11 மாதத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலை, சுமார் 2.7 லட்சம் பேருக்கும் மேல் பின்பற்றுகின்றனர். கதைகேளு கதைகேளு சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் பல, லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. அவற்றில், சுஜிதா வீட்டின் டூர் மில்லியன் வியூகளுக்கு அதிகமாகச் சென்றிருக்கிறது. மேலும், அவருடைய சுற்றுலா காணொளியும் மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளது. யுடியூபிலிருந்து கொடுக்கப்படும் சில்வர் பட்டன் பெற்றிருக்கும் சுஜிதா, தங்க பட்டனுக்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.