Advertisment

KFC-ன் சுத்த சைவ உணவுகள் எப்படி இருக்கின்றன? - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வைரல் ரிவ்யூ வீடியோ!

Pandian Stores Hema Latest Viral Video KFC Veg items review இதில், ரூ.158 மதிப்புள்ள சைவ ரைஸ் பவுல், சைவ பேட்டி, ரூ.145 மதிப்புள்ள இரண்டு பர்கர், ரூ.125 மதிப்புள்ள சாக்கோ மட் பய் மற்றும் ரூ.125 மதிப்புள்ள காபி மூஸ் கேக் ஆகியவை உள்ளன.

author-image
WebDesk
New Update
Pandian Stores Hema Latest Viral Video KFC Veg items review

Pandian Stores Hema Latest Viral Video KFC Veg items review

Pandian Stores Hema Latest Viral Video KFC Veg items review : ஏராளமான உணவு சம்பந்தப்பட்ட காணொளிகளை சமீப காலமாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்து வருகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா. அந்த வரிசையில் சிக்கன் உணவிற்கு பேர்போன KFC கடையிலிருந்து சைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு, அதன் சுவை பற்றியும் அதற்கு எவ்வளவு செலவு ஆனது என்பதைப் பற்றியும் முழுமையாகக் கலந்துரையாடி காணொளி ஒன்றை அப்லோட் செய்திருக்கிறார். 4 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கும் இந்த வீடியோவில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Advertisment

"பொதுவாக KFC பற்றி ரிவ்யூ செய்பவர்கள் சிக்கன் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், நாம் இன்று அந்தக் கடையின் சைவ உணவுகளை பற்றித்தான் பார்க்கவிருக்கிறோம். அந்த வகையில், அங்கு என்னவெல்லாம் சைவ உணவுகள் இருக்கிறதோ அது அத்தனையும் நான் ஆர்டர் செய்துவிட்டேன். என்னவெல்லாம் ஆர்டர் செய்திருக்கிறேன், அதன் விலை எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்" என்றபடி தயாரானார் ஹேமா.

publive-image

"எப்போதுமே சிவப்பு நிற பேக்கில்தான் தருவார்கள். ஆனால், இந்த சைவ உணவுகளைப் பச்சை நிற பேக்கில் கொடுத்திருக்கிறார்கள். இந்த சைவ உணவு வகைகளை ஆர்டர் செய்வதற்கு கிட்டதட்ட 750 ரூபாய் செலவானது. இதில், ரூ.158 மதிப்புள்ள சைவ ரைஸ் பவுல், சைவ பேட்டி, ரூ.145 மதிப்புள்ள இரண்டு பர்கர், ரூ.125 மதிப்புள்ள சாக்கோ மட் பய் மற்றும் ரூ.125 மதிப்புள்ள காபி மூஸ் கேக் ஆகியவை உள்ளன. இது தவிர இரண்டு சிறிய மற்றும் பெரிய ஸ்பூன்கள், டிஷ்யூ பேப்பர்கள் உள்ளன" என்றபடி ரைஸ் பவுலை எடுத்தார்.

"ரைஸ் பவுல் பார்ப்பதற்கு சிறு வயதில் நம் அம்மா ரசம் சாதம் பிசைந்து பள்ளிக்குக் கொடுத்துவிடும்போது, மதியம் காய்ந்து போய் ஒரு மாதிரியாக இருக்குமே அப்படி உள்ளது" என்று வர்ணித்தார். பிறகு பர்கரை பிரித்து, மயோ, சைவ பேட்டி, லெட்டியூஸ் ஆகியவை அதனுள் இருக்கின்றன என்றபடி அதனை சாப்பிட்டார். செம்ம டேஸ்டியாக உள்ளது என்றபடி அவ்வளவையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

அடுத்ததாகப் பேட்டியை டேஸ்ட் செய்தவர், அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அதனைப் பிரித்துப் பார்த்தார். உருளைக்கிழங்கு, கேப்ஸிகம், பட்டாணி, சோளம், கேரட் மற்றும் சில்லி ஃப்ளெக்ஸ் ஆகியவை உள்ளன என்றபடி மீண்டும் அதனை சுவைத்து சாப்பிட ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு இந்த சைவ பேட்டியை பரிந்துரைத்தபடி ரைஸ் பவுலை சுவைக்க ஆரம்பித்தார்.

ரைஸ் பவுலோடு பேட்டியை இணைத்து சாப்பிட்டு பார்த்தார். ஆனால், அவருக்கு இந்த ரைஸ் பவுல் மீது ஈர்ப்பு இல்லை. கரம் மசாலா ஹேமாவிற்கு பிடிக்காது என்பதால் இந்த ரைஸ் பவுல் பிடிக்கவில்லையாம். அதனால் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இனிப்பு பக்கம் திரும்பினார்.

மட் கேக் மற்றும் மூஸ் கேக் ஆகியவற்றை சுவைத்தவர், இரண்டும் மிகவும் அருமையாக உள்ளது என்றபடி இந்த காணொளியை நிறைவு செய்தார். மொத்தத்தில், அந்த ரைஸ் பவுலை தவிர மற்ற எல்லா KFC சைவ உணவுகளும் ஹேமாவிற்கு பிடித்திருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Serial Acress Hema Kfc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment