20 வருஷ பழைய சோஃபா, 2 லட்ச ரூபாய் ஃபிரிட்ஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ஹோம் டூர் வீடியோ
ஹேமா, Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஹோம் டூர் வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
Advertisment
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார். இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.
ஹேமா, Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஹோம் டூர் வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீடியோவில் பேசும் ஹேமா, நிறைய பேரு ஹோம் டூர் போடுங்க அடிக்கடி கேட்கிறீங்க. அதுக்குத்தான் இந்த வீடியோ. நம்ம இருக்கிறது வாடகை வீடு. இதுக்கு முன்னாடி நாங்க இருந்தது சின்ன வீடு. ஆனா, இது கொஞ்சம் பெரிய வீடுனு சொல்லி ஹேமா, முன்னாடி போர்ஷனை காண்பிக்கிறார்.
நீங்க நிறைய வீடியோவுல இந்த இடத்தை பாத்துருப்பீங்க, இங்கதான் சாயங்காலம் நேரம், சாத்விக் கூட விளையாடுவோம். இப்போ மழை சீசன் வந்துடுச்சு. மழை பெய்யும் போது, இந்த இடத்துல காஃபி குடிச்சா நல்லா இருக்கும். துணி காயப் போடுறதுலாம் இங்கதான். அதுபோக சாத்வீக் ஓட விளையாட்டு பொருட்களாம் இங்க இருக்கு.
அப்படியே உள்ளே வந்தா, ஒரு பெரிய ஹால், ஓப்பன் கிச்சன் ஓட அட்டச்டு ஆகியிருக்கும். அப்படியே சாத்விக் முதன்முதலாக ஆசைப்பட்டு வாங்கிய ஸ்டார், கீ ஹோல்டர், சோஃபா என அனைத்தையும் ஹேமா காண்பிக்கிறார்.
நிறையபேரு வீடு நல்லா இருக்கு, சோஃபா மட்டும் ஏன் நீங்க மாத்த மாட்டுக்கீங்கனு கேட்கிறீங்க. ஆனா, இது ஒரிஜினல் தேக்கு சோஃபா. இந்த சோஃபா வாங்கி 20 வருஷம் மேல ஆகுது. அதனால இதை நாங்க ரீபிளேஸ் பண்ணாம இருக்கோம். ஒருவேளை நாங்க எதிர்காலத்துல புதுவீட்டுக்கு போனா கூட அங்கயும் இந்த சோஃபா இருக்கும் என்ற ஹேமா, தொடர்ந்து சாத்வீக் ஓட விளையாட்டு பொருட்கள் எல்லாம் காண்பிக்கிறார்.
வலது பக்கம் ஒரு ரூம் இருக்கு. இங்கதான் அம்மா, அப்பா இருக்காங்க. பிறகு ஹாலில் இருக்கும் டிரெட்மில் மெஷினை காட்டி, இதை வாங்கும்போது எனக்கும், என் புருஷனுக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சி. நீங்க இதெல்லாம் யூஸ் பண்ண மாட்டீங்க. ஜிம்ல சேர்ந்துக்கோங்க சொன்னேன். ஆனா, எவ்வளவு சொல்லியும் கேட்காம, டிரெட்மில் வாங்கிட்டாங்க. வாங்கி ஒரு வாரம் கூட யூஸ் பண்ணல. அதுவும் டிரெட்மில் வாங்கின பிறகு, புது ட்ரெக்ஸ், ஷூ, பனியன்லாம் வாங்கி பெரிய அலப்பறை பண்ணாரு. இப்போ ஒன்றரை வருஷமா இது சும்மாதான் இருக்குது. எனக்கு வீட்டு வேலையே சரியா இருக்கிறதால, நான் இதெல்லாம் யூஸ் பண்றதில்ல.
இந்த ஹால்க்கு ஒரு பக்கம் கிச்சன், இன்னொரு பக்கம் நம்ம ரூம் இருக்குது. இந்த வீடியோ எடுக்கிறது முன்னாடி, இன்னொரு வீடியோ எடுத்தோம். அதனால ரூம் கொஞ்சம் கசகசன்னு இருக்கும். தப்பா நினைக்காதீங்கனு சொல்லி, ஹேமா தன்னுடைய பெட்ருமை காட்டுகிறார். இங்க ஷூட்டிங் லைட்ஸ், பெட், ரோலிங் சேர், என்னோட போட்டோஸ், டிவி, பீரோ எல்லாமே இருக்குது. இந்த ரூம் வீடியோ நான் ஏற்கெனவே யூடியூப்ல போட்ருக்கேன். அப்புறம் எந்த அப்டேட்டும் பண்ணல, அப்படியேதான் இருக்குது.
ரூம்க்கு நேரா அந்த பக்கம் கிச்சன் இருக்குது. இங்க பிரிட்ஜ், வாட்டர்ஃபில்டர், வாஷிங் மெஷின், அப்புறம் எல்லார் வீட்டுலயும் இருக்கிறது போல மிக்ஸி, இண்டக்ஷன் இருக்குது. இது வாடகை வீடுங்கிறதால, தனியா பூஜையறை கிடையாது. அதுனால கிச்சன்லய நாங்க சாமி போட்டோஸ் வச்சு பூஜை ரூம் செட் பண்ணிடோம். அவ்வளவுதான்! இதுதான் நம்மளோட ஹோம் ஸ்வீட் ஹோம் என்று முடிக்கிறார் ஹேமா!
ஹேமா ஹோம் டூர் வீடியோ இது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”