New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/meena-1.jpg)
Pandian stores hema rajkumar Rs 3 lakh woth Jhumka video viral
விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா.
Pandian stores hema rajkumar Rs 3 lakh woth Jhumka video viral
சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா மீதுதான் இருக்கிறது.
மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிற சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றினார்.
விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
மூன்று சகோதரர்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம் மற்றும் அவர்களின் மளிகைக் கடையான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சீரியல், அதன் திரைக்கதையால் குடும்ப பார்வையாளர்களை ஈர்த்தது.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன், சுஜிதா, காவ்யா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.
ஹேமா, Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்.
அதில் சில மாதங்களுக்கு முன், தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்க நகைக்கடைக்கு தனது மகன் சாத்வீக் ஆக நகை வாங்க சென்றிருந்தார். அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூபில் பகிர்ந்திருந்தார்.
அப்போது 3 லட்சம் மதிப்புள்ள ஜிமிக்கி கம்மல், 150 சவரன் மதிப்புள்ள தங்க பிரைடல் ஜூவல்லரி செட் ஆகியவற்றை அணிந்து அழகு பார்த்தார். இப்போது அதன் ஷார்ட்ஸ் வீடியோ ஒன்றை மீண்டும் தன் யூடியூபில் ஹேமா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.