பாண்டியன் ஸ்டோர் நடிகை ஹேமா ராஜ்குமார், பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். தனது அனுபவத்தை அவர் அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர் முதல் பாகத்தின் படப்பிடிப்பும் இதுபோல்தான் கொடைக்கானலில் நடைபெற்றது என்று அவர் கூறுகிறார். காலை 4.30 மணிக்கு அருகில் இருக்கும் ஆட்டோ அண்ணாவை வரச் சொல்லி உள்ளார். ஒரு பெட்டி மற்றும் ஒரு மேக் அப் பேகை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வின் ஒட்டுமொத்த டீமும் ரயிலில் கொடைக்கானல் செல்கின்றனர். தொடர்ந்து ரயிலில் வழங்கப்படும் டீ பற்றி பேசுகிறார்கள். மேலும் ஹோட்டலில் தங்கும்போது கிடைக்கும் பால் பொடியை எல்லாம் நான் சாப்பிடுவேன். குழந்தைக்கு வாங்கும் செர்லாக்கையும் நான் சாப்பிடுவேன் என்று ஹேமா கூறுகிறார். மேலும் அந்த டீயில் நெய்யை கலந்து குடித்தது போல் அந்த டீ இருப்பதாக அவர் கூறுகிறார்.
இந்த டீக்கு பதிலாக சுடு தண்ணீரில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிட்டிருக்கலாம் என்று அவர் கூறுகிறார். லக்ஷிமீ அக்கா சாப்பாடு எடுத்து கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து ’வாடி வாடி நாட்டுக்கட்டை’ பாடலுக்கு அனைவரும் ஆடுகின்றனர். இதை ரீல்ஸ் எடுகின்றனர். தொடர்ந்து ரயிலில் கொடுக்கப்படும் உணவை சாப்பிடுகின்றனர். இந்த உணவு நன்றாக இல்லை என்று ஹேமா சொல்கிறார். தொடர்ந்து அந்த ரயிலில் எதிர்பாராத விதமாக அருண் பாண்டியன் வருகிறார். அவருடன் அனைவரும் பேசுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“