Pandian Stores Hema Viral Youtube Video Tamil News : நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், சுட்டியான மருமகளாக நடிக்கும் ஹேமா, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலையும் கையாண்டு வருகிறார். அழகு குறிப்புகள் முதல் Vlog, சேலஞ் உள்ளிட்ட காணொளிகளைப் பதிவு செய்து வரும் இவருடைய பல காணொளிகள் ட்ரெண்டிங்கில் வருவதுண்டு.
அந்த வரிசையில், சமீபத்தில் ஓர் உணவு வகையை முயற்சி செய்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் காணொளி ஒன்றை எடுத்தார். ஆனால், அவர் ஆசையாக ஆர்டர் செய்த அந்த உணவு, உண்மையில் அவர் நினைத்த உணவு இல்லையாம். அவர் ஏமாற்றப்பட்டதைத்தான் அந்த காணொளியில் பதிவு செய்து வெளியிட்டிருந்தார். 3 லட்சம் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் அந்த காணொளியில், அப்படி என்ன ஹேமா ஏமாற்றப்பட்டார் என்பதைப் பார்க்கலாம்..
ஸ்பெஷலான உணவை ஆர்டர் செய்து சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்ட ஹேமா, ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயே அந்த உணவை ஆர்டர் செய்து காத்துக்கொண்டிருந்தார். இந்த உணவை ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அடடா! என்ன ஒரு மணம், என்ன ஒரு டேஸ்ட் என்று பூரித்த ஹேமா, அதனை நம்முடனும் பகிர ஆசைப்பட்டு ஆரடர் செய்திருக்கிறார்.
50 நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு வந்தது அந்த உணவு. அதுதான் ‘கிழி பரோட்டா’. “ஒருமுறையாவது நம் வாழ்க்கையில் சில சாப்பிடவேண்டும் என்று நினைக்கும் உணவுகளில் ஒன்றுதான் இந்த கிழி பரோட்டா” என்றபடி வித்தியாசமாகக் கட்டப்பட்ட உணவு பாக்கெட்டை பிரித்தார். ஆனால், அவர் முன்பு சாப்பிட்ட அந்த கிழி பரோட்டாவை போல் இது இல்லை என்று கண்டு ஏமாந்துபோனார்.
“என்னடா பெயரே வித்தியாசமா இருக்கே என்று நினைத்து ஆரடர் செய்தபோது அதன் பேக்கிங் முதல் சுவை வரை வித்தியாசமாக இருந்தது. ஆனால், இந்த பரோட்டா அப்படி அல்ல. இதில் இரண்டு பரோட்டாவிற்கு இடையே கொத்துக்கறியை அடைத்துக் கொடுத்துவிட்டனர். இது உண்மையான கிழி பரோட்டாவே அல்ல” என்று தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். என்றாலும், கொத்துக்கறி நல்ல சுவையாக இருந்ததனால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். கொத்துக்கறி பரோட்டா என்று நினைத்து அதனை சாப்பிட்டு முடித்தார். “அடுத்தமுறை உண்மையான கிழி பரோட்டாவை சாப்பிட்டு காண்பிக்கிறேன்” என்பதோடு அந்த காணொளியை நிறைவு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil