Pandian Stores Hema Viral Youtube Video Trending Video Tamil News : கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரைச் சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நீக்கப்பட்டதிலிருந்து, அதில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் இறப்பும் அதன் படப்பிடிப்பும் என தினமும் ஏதாவதொரு செய்தி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. அந்த வரிசையில், அந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா, தன்னுடைய சொந்த மகனின் முதலாவது பிறந்தநாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடியுள்ளார். இந்தக் கொண்டாட்ட காணொலிதான் யூடியூப் ட்ரெண்டிங்கில் தற்போது முதலிடத்தில் உள்ளது.

சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் தங்களுக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலை ஆரம்பித்து, பல பொழுதுபோக்கு மற்றும் உபயோக காணொளிகளை அப்டெட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் ஹேமாவின் யூடியூப் சேனலில் 5 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைப்பர்ஸ் உள்ளனர். இவர் எப்போது வீடியோ அப்லோட் செய்தாலும் ட்ரெண்டிங்கில் வந்துவிடும். அதேபோல தன்னுடைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவின் முதல் பகுதியை நேற்று வெளியிட்டார். இதுதான் இப்போது முதலிடத்தில் உள்ளது.
ஓர் ஹோட்டலில் ஹேமா மகன் சாத்விக்கின் ஃபேவரைட் கார்ட்டூன் கோகோமெலன் தீமில் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது கொண்டாட்ட மேடை. “ஹேமா வயிற்றில் சாத்விக் இருந்த காலகட்டத்திலிருந்தே நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிரசவத்திற்கு 4 நாள்கள் முன்பு வரை ஷூட்டிங்கிற்கு வந்தார் ஹேமா. இதெல்லாம் யாராலயும் பண்ண முடியாது. மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். சாத்விக் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழவேண்டும்” என்று வாழ்த்தினார் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷீலா.

“தன் குழந்தைகூட இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்துவார் ஹேமா. என்றாலும் அவர் எங்கு இருந்தாலும் தன் குழந்தைக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தெரிந்துகொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பார். சாத்விக்கை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது” என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் சாந்தி வில்லியம்ஸ் வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனக்கென வாங்கிய சிறிய கியூட் காரில் பயணம் செய்தபடி என்ட்ரி கொடுத்தார் அந்நாளின் குட்டி நாயகன் சாத்விக. சில பிரபலங்களின் வாழ்த்துகளோடு இந்த முதல் பகுதி காணொளி நிறைவடைந்தது. இரண்டாம் பகுதியில்தான் கேக் வெட்டி பரிமாறுவதைக் காண்பிப்பார்கள் போல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil