பயன்படுத்தப்படாத நெயில்பாலிஷ், மேக்-அப் பேக் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா அலமாரி டூர்!

Pandian Stores Hema Wardrobe Tour Trending தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அவருடைய அலமாரியில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Pandian Stores Hema Wardrobe Tour Youtube Tamil News
Pandian Stores Hema Wardrobe Tour Youtube Tamil News

Pandian Stores Hema Wardrobe Tour Youtube Tamil News : திரைப்படங்களைவிட சீரியல்களில் நடிக்கும் நடிகைகளை பார்ப்பதற்குத்தான் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். காரணம், அவர்கள் தினமும் விதவிதமாக உடுத்தும் உடைகளும் அதற்கு மேட்சான ஆபரணங்களும்தான். சீரியலின் கதையைப் பற்றி டிஸ்கஸ் செய்வதைவிட, அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளை பற்றித்தான் அதிகம் டிஸ்கஷன் இருக்கும். அந்த வரிசையில், சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில்  ஹேமா, தன்னுடைய துணி அலமாரியைச் சுற்றிக்காட்டியுள்ளார்.

யூடியூபில் பிரபலங்கள் தங்கள் வீட்டைச் சுற்றி காட்டுவது, கிச்சன், படுக்கையறை, அவ்வளவு ஏன் கழிப்பறை வரை அத்தனையையும் சுற்றிக்காட்டி மக்களிடமிருந்து லைக்ஸ்களை குவித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ஹேமா, தன்னுடைய அலமாரியைச் சுற்றிக்காட்டி வீடியோவை அப்லோட் செய்திருக்கிறார். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அவருடைய அலமாரியில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஏற்கெனவே இரண்டு பீரோக்கள் முழுக்க புடவைகள் இருக்க, இந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் துணிகள் யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கெனவே கட்டிய புடவைகளாம். இவற்றை எண்ணுவதற்கே நேரம் பத்தாது போல. அதனோடு தினசரி தான் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பாக்ஸ், இந்த அலமாரியில்தான் இருந்தது.

அடுத்தபடியாக ஒரு அடுக்கு முழுக்க சரும பராமரிப்பு பொருள்கள். ஃபேஸ் வாஷ், சீரம், நைட் க்ரீம், சன்ஸ்க்ரீன் என ஏராளமான பொருள்கள் வரிசையாக அடுக்கி இருந்தன. மறுமுனையில் லென்ஸ் பாக்ஸ், சில்லறை டப்பா, வளையல் பாக்ஸ், சின்ன கோப்பைகள், உலர்ந்த பழங்கள் என வரிசைப்படுத்தி இருந்தன. அதனுடன், தன்னுடைய மாமியார் கொடுத்த ஒன்றரை வயதில் எடுக்கப்பட்ட தன் கணவருடைய புகைப்படத்தை ஃப்ரேம் செய்து வைத்திருந்தார்.

அடுத்த அடுக்கில், பயன்படுத்தப்படாத நெயில்பாலிஷ், டைரி, லேம்ப், மேக் அப் பெக், பயன்படுத்தப்போகும் பெட்ஷீட் ஆகியவை இருந்தன. கூடவே, தோடு பாக்ஸ், மேக் அப் கிட், கடிகார பாக்ஸ், அலங்கார நகைகள் என கலவையாக இருந்தன. முக்கியமாக தன்னுடைய திருமண ஆல்பம் வைத்திருந்தார். அதனைத் திறந்து காட்டி தனியாக ஒரு காணொளி போடுவதாகவும் ஒரு ஹின்ட்டை கொடுத்துவிட்டார். இனி அதைப் பார்ப்பதற்காகவும் மக்கள் ரெடியாகிவிடுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores hema wardrobe tour youtube tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com