தவறான கூகுள் பதிவு, தினசரி ஊதியம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வைரல் வீடியோ!

Pandian Stores Hema Youtube Channel Review Tamil News அவனுக்கு விவரம் தெரிந்து, அவன் விருப்பப்பட்டால் நடிக்கட்டும். அதுவரை எந்த முயற்சியும் செய்யப்போவதில்லை.

Pandian Stores Hema Youtube Channel Review Tamil News
Pandian Stores Hema Youtube Channel Review Tamil News

Pandian Stores Hema Youtube Channel Review Tamil News : பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மட்டுமல்ல ரியல் வாழ்க்கையிலும் ஆண் குழந்தைக்குத் தாயாக இருக்கும் ஹேமா, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் ஏராளமான என்டெர்டெயினிங் காணொளிகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில், அவருடைய ஜூலை மாத வீடியோக்களுக்கு வந்திருக்கும் மக்களின் சில கமென்ட்டுகளை எடுத்து, அதற்கு பதிலளித்துப் பதிவு செய்திருந்தார். அதன் தொகுப்பு இதோ..

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஹேமா, அதையும் பதிவு செய்து அப்லோட் செய்திருந்தார். அந்த காணொளிக்கு, “கூகுளில் உங்களுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 19 தானே போட்டிருக்கிறது. நீங்கள் ஏன் இப்போது ஏன் கொண்டாடுகிறீர்கள்?” என்று வந்த கமென்ட்டிற்கு,

“என்னுடைய பெயரிலேயே இன்னொரு ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. அவர்களுடைய தகவல்களையும் என்னைப் பற்றிய தகவல்களையும் மாற்றி மாற்றி இணைத்துத்தான் கூகுளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்னுடைய பிறந்தநாள், ஜூலை 12 தான்”

இவ்வளவு மேக்-அப் பொருள்கள் உபயோகிக்கிறீர்களே, சருமம் என்னாவது?

நான் 9 ஆண்டுகளாக மேக்-அப் பொருள்களை உபயோகித்து வருகிறேன். என்னதான் கெமிக்கல் கலந்த பொருள்களைப் பயன்படுத்தினாலும், சரும பராமரிப்பிற்கு வீட்டிலிருக்கும் இயற்கை பொருள்களைத்தான் பயன்படுத்துவேன். அதேபோல, நல்ல மேக்-அப் பொருள்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து உபயோகித்தால் எந்த பிரச்னையும் வராது”.

நேரம் மற்றும் பணத்தை எப்படி மேனேஜ் செய்வது?

டைம் மேனேஜ்மேன்ட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நினைத்தபடி எந்த வேலையையும் செய்ததே இல்லை. நான் ஒரு பிளான் போடுவேன் ஆனால், நடப்பது வேறாக இருக்கும். அதனால் அதைப் பெட்ரி என்னால் சொல்லமுடியாது. ஆனால், அனாவசிய செலவைக் குறைத்துக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்தலாம். நமக்கு எது வேண்டுமோ அதை மட்டும்தான் வாங்கவேண்டும். தேவையில்லாத ஆடம்பர செலவுகளைக் கண்டறிந்து குறைத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு தினசரி ஊதியமா அல்லது மாதச் சம்பளமா?

எனக்கு மாத சம்பளம்தான். எத்தனை நாள் நடிச்சிருக்கோமோ, அத்தனை நாளுக்கான சம்பளம்தான்.

உங்கள் குழந்தையை நடிக்க வைப்பீர்களா?

ஏற்கெனவே சில விளம்பரங்களுக்கான வாய்ப்புகள் அவனுக்கு வந்தது. ஆனால், அவனை வெளிப்படுத்துவதில் குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லை. அதனால், தவிர்த்துவிட்டோம். அவனுக்கு விவரம் தெரிந்து, அவன் விருப்பப்பட்டால் நடிக்கட்டும். அதுவரை எந்த முயற்சியும் செய்யப்போவதில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores hema youtube channel review tamil news

Next Story
சூடான எலுமிச்சை தண்ணீர் உடல் கொழுப்பை குறைக்குமா?- மருத்துவ நிபுணர் கூறுவது என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express