லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்… பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் பர்சனல் லைஃப் சீக்ரெட்ஸ்!

குரூப் டான்சராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்பு சின்னத்திரை நடன ஷோ மூலம் தனது வெற்றி பயணத்தை துவக்கினார்.

pandian stores kathir mullai pandian stores
pandian stores kathir mullai pandian stores

pandian stores kathir mullai pandian stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலை பார்க்காத தமிழ் குடும்பங்களே இல்லை எனலாம். சாதாரணமாக வீட்டில் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த சீரியலை இளைஞர்களும் பார்க்க மிஸ் செய்வதில்லை.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய ஜோடி பொருத்தம் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்றனர். ஆனால் சித்ரா மரணம் சீரியலில் மட்டுமில்லை, நிஜத்திலும் கதிரை வருந்த வைத்தது.

கதிர் ஒரு டான்சர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில் குரூப் டான்சராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்பு சின்னத்திரை நடன ஷோ மூலம் தனது வெற்றி பயணத்தை துவக்கினார்.

இவர் விஜய் டிவி புகழ் சுகாஷினை காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் காதல் மலர்ந்ததும் டான்ஸ் ஷோவில் தான்.கதிருடன் பழகிய பலரும் அவரைப் பற்றி கூறுவது கண்ணியமாக நடந்து கொள்வது அவரிடமுள்ள பாசிட்டிவ் விஷயம் என்பதை தான். விஜிடேரியன் பிரியரான கதிர்ஏ.எல். விஜய் டைரக்ட் செய்த “இது என்ன மாயம்?” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானர் என்பது கூடுதல் தகவல்.

சமீபத்தில் கதிரை அவரின் ரசிகர்கள் சின்னத்திரை தளபதி என்று புனைப்பெயர் வைத்து அழைக்க தொடங்கினர். ஆனால் அதை விரும்பாத கதிர், பேட்டில் ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார்.

அழகான மனைவி, அன்பான மகள் இவர்கள் தான் மா.கா.பா-வின் சொத்து!

அதில், “”விஜய் அவர்களுடன் பலரும் என்ன சின்னத்திரை தளபதி என்று கம்பேர் செய்கிறார்கள். அந்த மாதிரி என்ன விஜய்யுடன் கம்பேர் பண்ணாதீங்க, ஏன் என்றால் அவருடன் என்ன கம்பேர் பண்ணினாள் நான் தான் திட்டு வாங்குவேன்” என்று வெளிப்படையாக கூறினார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores kathir mullai pandian stores serial kumaran wife pandian stores hotstar

Next Story
சாம்பாருக்கே தனி சுவை தரும் சின்ன வெங்காயம்… இப்படி ஒருமுறை செஞ்சி பாருங்க!sambar china vengaya samber recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com