Pandian Stores Meena Hema Diary Youtube Channel Review : ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனாவாக கலக்கிக்கொண்டிருக்கும் ஹேமா, தனக்கான தனிப்பட்ட யூடியூப் சேனலை ஆரம்பித்து, அவ்வப்போது ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்து வருகிறார். அப்படி என்னதான் இவருடைய சேனலில் ஸ்பெஷல்?

‘ஹேமா’ஸ் டைரி’ எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலின் வயது 4 மாதங்கள் மட்டுமே. முதல் வீடியோவே மறைந்த விஜே சித்ராவுடனான நினைவுகளின் கலெக்ஷன். 1 மில்லியனுக்கு அதிகமான வியூஸ்களை பெற்று, இன்றும் பலரால் பார்க்கப்படும் காணொளியாக இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் விசிட்தான் இவருடைய சேனலில் அதிகம் அப்லோட் செய்யப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, அழகு குறிப்பு, ஷாப்பிங் Vlog, டயட் டிப்ஸ், சரும பாதுகாப்பு சீக்ரெட்ஸ் என வழக்கமான காணொளிகளும் இந்த சேனலில் அதிகம்.

இவர் பதிவேற்றப்பட்ட காணொளிகளின் எண்ணிக்கை குறைவு என்றாலும், பல வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. அதிலும் இவருடைய மேக்-அப் டிப்ஸ் வீடியோ 2 மில்லியன் வியூஸ்கள் பெற்றிருக்கிறது. ஹேமாவின் ஒரிஜினல் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்திய வீடியோ, 1.4 மில்லியன் வியூஸ் பெற்றது.
இந்நிலையில் தற்போது லாக் டவுன் போடப்பட்டிருக்கும் காரணத்தால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஷூட்டிங்கும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த இறுதி நாள் ஷூட்டிங் அட்ராசிட்டிகளை பதிவு செய்து அப்லோட் செய்திருக்கிறார். இதுதான் தற்போதைய ட்ரெண்டிங் நம்பர் 5.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil