pandian stores meena jeeva vijay tv : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனாவுக்கு சமூகவலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த மீனா தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செல்ல மருமகள்.
இவரின் நிஜப்பெயர் ஹேமா ராஜ் குமார். ஆரம்பத்தில் குடும்பத்தை பிரிக்க வந்த வில்லி போலவே மீனாவின் கதாபாத்திரம் இருந்தாலும் இப்போது மீனா குடும்பத்தில் ஒன்றி விட்டது போல் கதை காட்ட தொடங்கி விட்டனர்.இணையத்தில் மீனாவின் டப் மேஷ் வீடியோக்களும் ட்ரெண்டடித்து வருகிறது. நன்றாக தமிழ் பேச தெரிந்த சீரியல் நடிகை என்பதால் மீனாவை இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர். திருமணமான மீனா, குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இவரின் மாமியார் தான் இவருக்கு மிகப் பெரிய பலமாம்.
MCA முடித்துவிட்டு திரை துறைக்கு வந்த மீனா நிறைய ஃபோட்டோ ஷூட் நடத்துவதில் ஆர்வம் கொண்டவர்.பாயும் புலி, ஆறாது சினம், சவரகத்தி போன்ற பெரிய திரையிலும் மீனா முகம் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
!நன்றாக தமிழ் பேச தெரிந்த சீரியல் நடிகை என்பதால் மீனாவை இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர்.மீனா கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடிகை கவிதா தான் நடித்து வந்தார். பின்பு அவருக்கு அந்த நேரத்தில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நேரம் கிடைத்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சீரியலை விட்டு பாதியில் வெளியேறினார். அந்த நேரம் தான் மீனாவுக்கு லக் அடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளானர் மீனா.
கதைப்படி இப்போது மீனாவுக்கு பெண் குழந்தை கயல்விழி பிறந்து இருக்கிறாள். நிஜத்திலும் அப்படித்தான், மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிறது. 3 மாதம் ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் சீரியலில் கலக்கி வருகிறார். இவருக்கு இவரின் கணவர் பெரும் துணையாக இருக்கிறார். அதுமட்டுமில்லை ஹேமா டைரிஸ் என்ற யூடுயூப் சேனலையும் நடத்தி கலக்கி வருகிறார்.