pandian stores mullai instagram vijay tv : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.
Advertisment
இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி,அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.
சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்கிறார். கூடிய விரைவில் சித்ராவுக்கு டும் டும் டும்.
சித்ரா முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட.
இப்படி இவரை பற்றி எத்தனையோ தகவல்கள் இருக்கிறது சொல்ல. கல்யாண பொண்ணு சித்ரா, இன்ஸ்டாவில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி, சுஜிதாவை கலாய்த்து அவர் வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ் வீடியோ படு வைரல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil