Pandian Stores Mullai Kavya Arivumani Skincare Tips Vijay Tv Tamil News
Pandian Stores Mullai Kavya Arivumani Skincare Tips Tamil News : விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் அறிவு கதாபாத்திரம் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் காவ்யா அறிவுமணி. 'பாண்டியன் ஸ்டோர்ஸில்' நடித்த சித்ராவின் மறைவுக்குப் பிறகு, முல்லையாக இனி யார் நடிப்பார் என்கிற கேள்விதான் முதலில் எழுந்தது. பலருடைய பெயர் முல்லை கதாபாத்திரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்டாலும், அவ்வளவு எளிதில் வேறு யாரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிற வாக்குவாதமும் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தது.
Advertisment
Pandian Stores Mullai Kavya
இறுதியாக காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தற்போது காவ்யாவும் மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்திருக்கிறார். அந்த வரிசையில் தன்னுடைய முல்லை கதாபாத்திரத்துக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று தன் இன்ஸ்டா பக்கத்தில் மக்களிடம் கோரிக்கையும் விடுத்தார். இது மிகவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பகிர்ந்துகொண்ட சரும பராமரிப்பு டிப்ஸ்களை இனி பார்க்கலாமா!
Kavya Arivumani Skincare Tips
Advertisment
Advertisements
"முகப் பொலிவுக்கு வெளிப்புற மேக் அப்பை விட, எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இயற்கையாகவே சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வரிசையில் சரியான அளவில் பழங்களும், காய்கறிகளும் நான் உட்கொள்வேன். மேலும், ஒவ்வொருவருடைய சருமமும் வெவ்வேறு வகையானது. அதனால், நம்முடைய சருமத்திற்கு எது சரியான பியூட்டி பொருள் என்பதை சரிபார்த்துத்தான் உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான அவுட்புட்டும் சரியாக இருக்கும்.
Pandian Stores Kavya Beauty Secrets
அதேபோல சரியான அளவு தூக்கமும் முக்கியம். கண்டிப்பாக 8 மணிநேரம் நல்ல தூக்கம் அவசியம். இது எல்லாம் இருந்தால் நிச்சயம் சருமம் மட்டுமல்ல மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உணவகங்களில் சாப்பிடுவதைவிட, முடிந்தவரை வீட்டு சாப்பாடு சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உணவு சமைக்கும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது இன்னும் ஆரோக்கியம்.
Vijay TV Mullai Kavya Skincare Secrets
இரண்டு நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து, நன்கு மசாஜ் செய்து தலைக்குக் குளித்தால் நிச்சயம் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். நான் சின்ன வெங்காயம் போன்றவற்றைப் பயன்படுத்துவேன். நல்ல ரிசல்ட் கொடுத்திருக்கிறது" என்று நிறைவு செய்தார் காவ்யா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"