pandian stores mullai new mullai kavya : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவைகள். அதில் முக்கியமான ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகிறார்கள். இதில் பாரதியின் தங்கையாக அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காவ்யா.
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நுழைந்த இவரை, அறிவுமணி என்றே அவர்கள் அழைத்து வருகிறார்கள். இளம் சீரியல் நடிகையான இவருக்கு, சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.
சென்னையில் பிறந்த வளர்ந்த காவ்யா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட். இவருக்கு நடிகை நயன்தாராவை மிகவும் பிடிக்குமாம். சின்னத்திரை நயன்தாராவாக வலம் வர வேண்டும் என்பது தான் இவருடைய மிகப்பெரிய ஆசையாம். அந்தளவுக்கு நயன்தாரா அவரது ரத்தத்தில் ஊறியிருக்கிறாராம். தவிர பையன்களை பின்னால் சுத்த விடுவதில் தான் மிகவும் கைத்தேர்ந்தவர் எனவும் பல நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆர்வம் மிகுந்த காவ்யா, வித விதமான படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரம்ப செய்துள்ளார்.
சேலை, சுடிதார், எத்னிக், மார்டன் என வித விதமான படங்களால் இன்ஸ்டாவை நிரப்பியிருக்கிறார் காவ்யா. இவரைப்பற்றி சொல்ல இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தியும் உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, காவ்யாவை தேடி வந்ததாம். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் படபிடிப்புக்காக அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டாராம் காவ்யா. இது குறித்து ஒரு பேட்டியில், “பிகில் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. பின் எனக்கு போன் பண்ணி திண்டிவனத்துக்கு சூட்டிங்கிக்கு காலை 11 மணிக்கு வந்துருங்கன்னு சூட்டிங்கிக்கு நானும் ஓகே என்று சொல்லிட்டேன். ஆனால், அன்று தான் எனக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சூட்டிங் வர சொன்னாங்க.
நான் எப்பவுமே எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி முடிவெடுத்து விடுவேன். அதுக்கு முன்னாடியே எதையும் யோசித்து செய்ய மாட்டேன். அதனால அப்ப பாரதி கண்ணம்மா சீரியல் சூட்டிங் போலான்னு நினைச்சு போயிட்டேன். அப்ப எனக்கு பிகில் படத்துக்கு போலாம்ன்னு தோணல. ஆனால், தளபதி படத்த மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்ப எனக்கு வருத்தமா இருக்கு” என்று தெரிவித்திருந்தார்.
சீரியல் மட்டுமில்லாமல், நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ள காவ்யா, நல்ல கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். அப்படி வந்த வாய்ப்பு தான் சித்ராவின் மறைவுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் அடுத்த முல்லை. தட்டி தூக்கிட்டாருல.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Pandian stores mullai new mullai kavya pandian stores serial kavya bharathi kannamma hotstar
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்