pandian stores mullai : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப தொடர் என்றால் கேட்கவே வேண்டாம். கஷ்டப்படுற மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை என்றதும் சீரியல் பிரியர்கள் நம்ம வீட்டு கதை என்று உருகி பார்க்க தொடங்கிடுவார்கள்.
Advertisment
பாண்டியல் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவருடன் நடித்து வரும் குமாரனுடன் இணைந்து ஜோடி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார் சித்ரா. இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.
கூடிய விரைவில் பெரிய திரையிலும் காலடி எடுத்து வைக்கிறார் சித்ரா. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து செம்ம கலக்கு கலக்கியவர்கள் பலர். சிவகார்த்திகேயன், சந்தானம் தற்போது ரியோ வரிசையில் அடுத்து சித்ராவிற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. கால்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. அவர் குறித்து சீக்ரெட்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.
Advertisment
Advertisements
சித்ரா முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றத் மற்றும் முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட.
சித்ரா சின்னத்திரயில் நிற வேறுபாடு அதிகம் என்ற கருத்தை முன்வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தார். டஸ்கிக் ஸ்கின்னுக்காக சித்ரா பல இடங்களில் வாய்ப்பை இழந்தாக உருக்கமாக ஒரு முறை பேட்டி அளித்திருந்தார்.
சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்கிறார்.