சித்ரா எனக்கு இன்ஸ்பிரேஷன்… அதே ஆதரவை கொடுங்க! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை உருக்கம்

Pandian Stores New Mullai Kavya Viral Instagram post பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவும் குழுவினரும் முடிவுசெய்து, அழகான பெண்களில் ஒருவரான “வி.ஜே. சித்ரா”வை இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தனர்.

Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra Instagram post Tamil News
Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra

Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra : நீண்ட காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ கதாபாத்திரத்துக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகை சித்ராவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். சித்ராவின் மறைவுக்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் காவ்யா, தனக்கும் ஆதரவு கொடுக்குமாறு முதல் முறையாக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லை கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அந்தக் கதாபாத்திரம் குறித்தும் சித்ரா குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காவ்யா.

Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra Instagram post Tamil News
Pandian Stores New Mullai Kavya

“நான் போஸ்ட் செய்யும் முதல் படம். இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் உருவாக்கப்பட்டுப் பயணிக்கும் கதாபாத்திரம் முல்லை. இது ஒரு அழகான கதாபாத்திரம். மேலும், ஒரு தமிழ் பெண் பிறந்து வளர்ந்த தமிழ்க் கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளுடன் அதன் சொந்த குணாதிசயங்கள் மற்றும் சரியான உடல் மொழியைக் கொண்டுள்ள கதாபாத்திரம். பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவும் குழுவினரும் முடிவுசெய்து, அழகான பெண்களில் ஒருவரான “வி.ஜே. சித்ரா”வை இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தனர்.

தனிப்பட்ட முறையில் நான் அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை. அவருடன் பேச ஒருபோதும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஒரு நிகழ்ச்சியில் ஒரேயொரு முறை மட்டுமே நான் அவரை வெகு தொலைவிலிருந்து பார்த்தேன். அந்த நேரத்தில் நான் சேனலுக்கு மிகவும் புதியவள். அது அவர்தான் என்பது எனக்குத் தெரியாது. அதனால் அவரோடு நேரம் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra Instagram post Tamil News
Kavya Insta Post

ஆனால், அவர் தனது வாழ்க்கையை சிறந்ததாகவும், பலருக்கு ஊக்கமளிக்கும் பெண்களில் ஒருவராகவும் உருவாக்கியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவருடைய கதைகள் எனக்கும் ஊக்கமளித்தன. சீரியல் பார்க்கும் பழக்கம் எனக்கு அவ்வளவாக இல்லை என்பதால் அவருடைய முல்லை கதாபாத்திர காட்சிகளைப் பார்த்ததில்லை. சில இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra Instagram post Tamil News
Pandian Stores Mullai Kavya Post

அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாத்திரத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். ஆனாலும், “ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாகத்தான் முடிகிறது. அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரங்கள் மட்டுமே ஒரு மனிதனை இன்னொருவரிடமிருந்து வேறுபடுத்துகின்றன”

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

அவர் முல்லை என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்தார், சித்ரா தன்னை விட்டு விலகுவார் என்று முல்லை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவர் நம் பார்வையிலிருந்து மறைந்திருக்கலாம் ஆனால், நம் இதயங்களிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை. அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் என் ஆறுதலைக் கூறிக்கொள்கிறேன்.

நான் இந்த கதாபாத்திரத்தை செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு நடிகராக நான் இதை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை முன்னேற வேண்டும், நான் நடிக்கும் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra Instagram post Tamil News
Mullai Kavya in Saree

பாரதிகண்ணாமா “அரிவுமணி” பலரால் விரும்பப்பட்ட அழகான கதாபாத்திரம். அதேபோலவே முல்லைக் கதாபாத்திரத்திற்கும் சிறப்பான நடிப்பைக் கொடுப்பேன். என் ரசிகர்களையும் முல்லை ரசிகர்களையும் ஏமாற்ற மாட்டேன். நடிப்புதான் என ஆர்வம், தொழில், என் உலகம், என் காதல், என்னுடைய எல்லாமே!

பூஜ்ஜியத்திலிருந்து இங்கு வரை என்னை ஆதரித்த அனைத்து மக்களுக்கும், என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் என் இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கும் நன்றி

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)


புதிய முல்லை, எனக்கும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கும் ஆதரவளித்து உங்கள் அன்பைக் காட்டுங்கள். என் முழு மனதுடன் அனைவர்க்கும் நன்றி” எனக்கூறி இந்த நீண்ட பதிவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருக்கிறார் காவ்யா. இவருடைய இந்த பதிவிற்கு பாசிட்டிவ் கமென்ட்டுகள் குவிந்துகொண்டு இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores new mullai kavya shares about vj chithra instagram post tamil news

Next Story
அறுசுவை நிறைந்த தக்காளி தொக்கு : எளிதில் செய்வது எப்படி?Thakkali Thokku recipe simple tomato thokku chutney recipes Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express