New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Hrjup.jpg)
Pandian Stores Serial Hema Viral Babycare Youtube Video Tamil News
Pandian Stores Serial Hema Viral Babycare Youtube Video Tamil News
Pandian Stores Serial Hema Viral Babycare Youtube Video Tamil News : நீண்ட காலமாக டிஆர்பியில் டாப் இடத்தைப் பிடித்திருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மீனவாக அனைவரையும் ஈர்த்தவர் ஹேமா. தொடரில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் குழந்தையை பெற்றெடுத்து, தற்போது ஷூட்டிங், வீடு என பிசியாக சுழன்றுகொண்டிருக்கிறார். இதற்கிடையில் யூடியூப் சேனலையும் ஆரம்பித்து, அதில் ஏராளமான பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், தன்னுடைய 10 மாத குழந்தையை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்கிறார், என்ன உணவு வகைகளைக் கொடுக்கிறார் உள்ளிட்ட பலவற்றைப் பகிர்ந்துகொண்ட காணொளி, ட்ரெண்டானது. அதில் என்னவெல்லாம் ஷேர் செய்திருக்கிறார் என்பதை இனி பார்க்கலாம்.
தன் குழந்தைக்காக அவர்களுடைய மருத்துவரின் பரிந்துரைப்படியே எல்லாவற்றையும் பின்பற்றுவதாகக் கூறி தொடங்கும் ஹேமா, அவரவர்களின் குழந்தை மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சொல்கிறார். 'மதர் கேர்' எனும் ப்ராண்டிலிருந்து மில்க் சோப், லோஷன், பவுடர், ஷாம்பூ, டிஷ்யூ, டயப்பர், பட்ஸ் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்தும் ஹேமா, எல்லோரும் குழந்தைகளுக்கென்று பொதுவாக வாங்கி பயன்படுத்தும் பொருள்களை வாங்குவதற்கு முன் கொஞ்சம் யோசிங்க என்று எச்சரிக்கிறார்.
அடுத்ததாக உணவு வகைகளைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு ஹேமா தண்ணீரே கொடுத்ததில்லையாம். வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்திருக்கிறார். தன் மருத்துவரின் ஆலோசனைப்படி பாலில் உள்ள தண்ணீரே குழந்தைக்கு போதுமானது என்றதால், தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் தன் அப்பன்னுக்கு (தன் மகனைச் செல்லமாக ஹேமா கூப்பிடும் பெயர்) கொடுக்கவில்லையாம்.
6 மாதத்திற்குப் பிறகு, ராகி கஞ்சி, வடித்த கஞ்சி உள்ளிட்ட திரவ உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். மேலும், கேரட், ஆப்பிள் போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய காய்கறி, பழங்களை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். இப்படிக் கொடுக்கும்போது, ஒரே உணவை மூன்று நாள்களுக்குக் கொடுப்பது சிறந்தது. அப்போதுதான் குழந்தைக்கு அந்த ருசி நாவில் ஓட்டுமாம். மூன்று நாள்களுக்குப் பிறகு வேறு உணவு வகைகளைக் கொடுக்கலாம்.
9 மாதத்திற்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பல் முளைத்துவிடும் என்பதால் இட்லி, தோசை போன்றவற்றைக் கொடுக்கலாம். அதையும் பால் கலந்து நன்கு அடித்துக் கொடுக்கிறார் ஹேமா. அதேபோல, வாரத்திற்கு 3 நாள்கள் தேங்காய்ப்பால் கொடுக்கலாம். பயித்தம் பருப்பு சாதம் மிகவும் நல்லது. இதற்கிடையில் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். மேலும், கடைகளில் விற்கும் செர்லாக் ஹேமா வாங்குவதில்லை. வீட்டிலேயே பிரத்தியேகமாக சத்து மாவு அரைத்துப் பயன்படுத்துகிறார்.
பச்சை பயிறு, பொட்டுக்கடலை, உடைத்த பாசிப்பருப்பு, பாதாம், முந்திரி, அரிசி மற்றும் ஏலக்காய் எடுத்து, எண்ணெய்யில்லாமல் வறுத்து, பொடி செய்து வைத்துக்கொண்டால், தேவையான நேரத்தில் அதனைத் தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்கிறார் ஹேமா. தேவைப்பட்டால் இதனோடு கொண்டைக்கடலை மற்றும் உளுந்து போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இனிப்பு சுவை வேண்டுமென்றால், பேரிட்சையை வேகவைத்து அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.