டான்ஸால் சேர்ந்த காதல் ஜோடி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் பர்சனல் லைஃப்!’

விஜய் டிவி புகழ் சுகாஷினை காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் காதல் மலர்ந்ததும் டான்ஸ் ஷோவில் தான்.

By: July 19, 2020, 8:10:21 AM

pandian stores serial kathir mullai : பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலை பார்க்காத தமிழ் குடும்பங்களே இல்லை எனலாம். சாதாரணமாக வீட்டில் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த சீரியலை இளைஞர்களும் பார்க்க மிஸ் செய்வதில்லை.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய ஜோடி பொருத்தம் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.

கதிர் ஒரு டான்சர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில் குரூப் டான்சராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்பு சின்னத்திரை நடன ஷோ மூலம் தனது வெற்றி பயணத்தை துவக்கினார்.

இவர் விஜய் டிவி புகழ் சுகாஷினை காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் காதல் மலர்ந்ததும் டான்ஸ் ஷோவில் தான்.

கதிருடன் பழகிய பலரும் அவரைப் பற்றி கூறுவது கண்ணியமாக நடந்து கொள்வது அவரிடமுள்ள பாசிட்டிவ் விஷயம் என்பதை தான். விஜிடேரியன் பிரியரான கதிர்ஏ.எல். விஜய் டைரக்ட் செய்த “இது என்ன மாயம்?” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானர் என்பது கூடுதல் தகவல்.

z கதிரை அவரின் ரசிகர்கள் சின்னத்திரை தளபதி என்று புனைப்பெயர் வைத்து அழைக்க தொடங்கினர். ஆனால் அதை விரும்பாத கதிர், பேட்டில் ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார்.

அதில், “”விஜய் அவர்களுடன் பலரும் என்ன சின்னத்திரை தளபதி என்று கம்பேர் செய்கிறார்கள். அந்த மாதிரி என்ன விஜய்யுடன் கம்பேர் பண்ணாதீங்க, ஏன் என்றால் அவருடன் என்ன கம்பேர் பண்ணினாள் நான் தான் திட்டு வாங்குவேன்” என்று வெளிப்படையாக கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pandian stores serial kathir mullai vijaytv serial pandian stores kathir

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X