Pandian Stores Sheela last day shoot Viral Video Hema Youtube : “தற்கொலை பண்ணுறப்போல சீன் எடுக்கும்போது க்ளோஸ் அப்பில் முகத்தைக் காட்டுவார்கள் ஆனால், வைட் ஆங்கிளில் டம்மிகளைதான் பயன்படுத்துவார்கள். இப்போது இந்த சீனில், பாடையில் எடுத்துச் செல்வதற்காக டம்மி ஒன்றை வைத்திருக்கிறார்கள், இதைப் பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன்” என்றபடி இறந்தவரின் சடலமாகப் பயன்படுத்தப்பட்ட டம்மியை நமக்குக் காட்டினார்.

பிறகு அம்மாவைத் தூக்கிக்கொண்டு போவதுபோன்ற சீனில் நடித்து முடித்த கையோடு, அழுதுகொண்டே பேசினார் ஹேமா. “அழுது அழுது கண்கள் எரியுது. மைண்ட்செட்டும் சரியில்லை” என்று 700 எபிசோடுகளாய் பயணம் செய்தவரின் இறுதி நாள் என்கிற வேதனையை மக்களோடு பகிர்ந்தது மட்டுமல்லாமல், ஷீலாவோடு இணைந்து பல சுவாரசிய விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார் ஹேமா.
“எல்லோருக்குமே அம்மா பிரிவது கஷ்டமாக இருக்கிறது. என்றாலும் அவருடன் பேசவேண்டும் என்று தோன்றியது. எத்தனை சீன் நடித்தாலும், இதுபோன்ற சீன்களில் நடிப்பது மிகவும் கடினமான ஒன்று” என்றபடி ஷீலாவிடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார் ஹேமா.

“பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது?”
“நான் 18 வருடங்களாக சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்து. ஆரம்பத்தில், என்னடா தினமும் வீல் சேரிலேயே அமர்ந்திருக்கிறோம் என்று கொஞ்சம் கடுப்பாக இருந்தது. ஆனால், இந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு இந்த அளவிற்கு கொண்டு வந்தது மிகப் பெரிய விஷயம்”.

இதனைத் தொடர்ந்து, இருவரும் ஒன்றாகப் பயணித்த நாட்கள், ஷீலாவிடமிருந்து கற்றுக்கொண்ட விதையுங்கள், உணவைப் பகிர்ந்துகொண்ட கதைகள் எனப் பல நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். நடனம், பாட்டு என எல்லாவற்றிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர் ஷீலாமா என்று புகழாரம் சூட்டினார் ஹேமா.
பிறகு, இறப்பதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்கும் போது, இறந்ததுபோன்று நடிப்பவர் எப்போதுமே சிரித்துக்கொண்டேதான் எழுந்திருக்கவேண்டும் என்கிற சாங்கியம் சினிமா துறையில் உண்டு என்றும் தேங்காய் மற்றும் எலுமிச்சை சுற்றி திருஷ்டி கழிப்பார்கள் என்றும் அதுபோன்று தான் ஷீலாவிற்கு செய்தார்கள் என்பதையும் பகிர்ந்துகொண்டார். இறுதியாக சிரித்த முகத்தோடு விடைபெறுகிறோம் என்றபடி இருவரும் விடைபெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil