இதைச் செய்தால்தான் வயதான தோற்றத்தை தவிர்க்கலாம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா டிப்ஸ்!

Pandian Stores Sujitha Skincare Secrets வைட்டமின் C நிறைந்த சீரம் முகத்திற்கு அப்லை செய்யலாம். தற்போதைய காலகட்டத்தில் வைட்டமின் C மிகவும் முக்கியம்.

Pandian Stores Sujitha Beauty Tips Skincare Secrets Tamil News
Pandian Stores Sujitha Beauty Tips

Pandian Stores Sujitha Skincare Secrets Tamil News : குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி, தற்போது டாப் ரேட்டிங் கொடுத்துக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களை தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கும் சுஜிதா, தான் தினமும் பின்பற்றும் சரும பராமரிப்பு வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார்.

Pandian Stores Sujitha

“நான் சருமம் மற்றும் தலைமுடிக்கு அதிகமான கவனம் செலுத்துவேன். என்னுடைய 30 வயது வரைக்கும் என்னை பற்றியோ என் சருமம் பற்றியோ நான் கவலை பட்டதே இல்லை. ஆனால், என்னுடைய தோழி வலியுறுத்தியதால்தான் இந்த மாற்றம். உண்மையில் முன்பைவிட இப்போது மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். நம் சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.

Sujitha Skincare tips

எந்த குறிப்பிட்ட பிராண்ட் பற்றியும் நான் சொல்லப்போறதில்லை. உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருள்கள் அல்லது பிராண்டை தேர்வு செய்வது உங்கள் கைகளில்தான் உள்ளது. ஆனால், தொடர்ந்து அதனைப் பயன்படுத்துவது முக்கியம்.  2 வாரங்கள் உபயோகித்துவிட்டு, எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று விட்டுவிடக்கூடாது. குளித்து முடித்த பிறகும், தூங்குவதற்கு முன்பும் சரும பாதுகாப்பு பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.

Pandian Stores Sujitha with her Son

முதலில் குளிர்ந்த நீரில் முகத்திற்குப் பயன்படுத்தப்படும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி மட்டுமே முகத்தைக் கழுவ வேண்டும். மற்ற பாடி வாஷ், சோப் போன்றவற்றை முகத்திற்குப் பயன்படுத்தவே கூடாது. உடலுக்கு சுடுதண்ணீர் பயன்படுத்தினாலும், முகத்திற்குக் குளிர்ந்த நீர் மட்டும்தான் உபயோகிக்கவேண்டும். அப்போதுதான் முகத்தில் இருக்கும் போர்கள் எல்லாம் விரியும். அதன் பிறகு நாம் பயன்படுத்தும் பொருள்கள் சருமத்திற்கும் சென்று அதன் தன்மையை செயல்படுத்தும்.

Pandian Stores Family

அதனைத் தொடர்ந்து, க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை நன்கு மசாஜ் செய்யவேண்டும். பிறகு காட்டன் துணியைத் தண்ணீரில் நனைத்து முகத்தை நன்கு சுத்தம் செய்யவேண்டும். பிறகு, வைட்டமின் C நிறைந்த சீரம் முகத்திற்கு அப்லை செய்யலாம். தற்போதைய காலகட்டத்தில் வைட்டமின் C மிகவும் முக்கியம்.

Sujitha with her Family


பிறகு, கண்களுக்குக் கீழே பயன்படுத்தும் க்ரீம். மற்ற க்ரீம்களைவிட கண்களுக்காக இருக்கும் க்ரீம்களை பயன்படுத்தினால், மேலும் பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் சென்சிடிவ். வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவது கண்களைச் சுற்றியுள்ள பகுதிதான். எனவே அந்த இடத்தை அதிக அக்கறை எடுத்துப் பார்த்துக்கொள்வது அவசியம்.

அடுத்தபடியாக மாய்ஸ்ச்சரைசர் அப்லை செய்யலாம். முகத்திற்கு மட்டுமல்லாமல், கை கால் என உடல் முழுவதும் மாய்ஸ்ச்சரைசர் தடவிக்கொள்வது அவசியம். அதிலும் காலை/இரவு க்ரீம் என தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ளலாம். இறுதியாக வெளியே செல்வதற்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தலாம். இரவிலும் சன்ஸ்க்ரீன் தவிர அதே பொருள்களைப் பயன்படுத்தலாம். சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores sujitha beauty tips skincare secrets tamil news

Next Story
அரிசி, மோர், உளுந்து… பொன்னிற சாப்ஃட் தோசை ரகசியம் இதுதான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express