Advertisment

புது மொட்டையோடு வாங்கிய முதல் கார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா யூடியூப் வீடியோ!

Pandian Stores Sujitha Youtube Channel Video Review Tamil News தீபாவளிக்கு முன்பே வந்துவிடும் என்று நினைத்தேன் ஆனால், தீபாவளி முடிந்துதான் வாங்க முடிந்தது

author-image
WebDesk
New Update
Pandian Stores Sujitha Youtube Channel Video Review Tamil News

Pandian Stores Sujitha Youtube Channel Video Review Tamil News

Pandian Stores Sujitha Youtube Channel Video Review Tamil News : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணியாக மட்டுமல்ல தாயாகவே வாழும் சுஜிதாவின் யூடியூப் சேனலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவருடைய காணொளியில் என்டெர்டெயின்மென்ட் மட்டுமல்ல, கதைகளும் ஏராளம். அந்த வரிசையில், சமீபத்தில் தான் வாங்கிய புதிய காருடன் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன் கூடவே நீதிக்கதை ஒன்றையும் இணைத்திருந்தார். இந்தக் காணொளி 2 லட்சம் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. அப்படி என்ன கார் சுஜி வாங்கினார்?

Advertisment
publive-image

'புது ட்ரெஸ் போட்டு, புது மொட்டையோடு புதிய கார் வாங்கப் போகிறோம்' என்று தொடங்கும் இந்த காணொளியில் தன்னுடைய மகன் மற்றும் கணவரையும் அவ்வப்போது வம்பிழுத்துக்கொண்டு வந்தது ரசிக்கும்படியாக இருந்தது. "நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த காரை வாங்கப்போகிறோம். இப்போது சென்றுகொண்டிருப்பது என்னுடைய கார். இப்போ வாங்கப்போவது அவர் ஆசை ஆசையாக வாங்கப்போகும் கார். தீபாவளிக்கு முன்பே வந்துவிடும் என்று நினைத்தேன் ஆனால், தீபாவளி முடிந்துதான் வாங்க முடிந்தது" என்றபடி ஷோரூமில் நுழைந்து, சட்டென கார் வாங்கி கேக் வெட்டி மகிழ்ந்தனர். கணவருக்கு 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி சாவியைக் கொடுத்தார் சுஜி.

புதிய காரில் ஏறியதும், 'ராகங்கள் பதினாறு..' பாடலை தன் கணவர் பாடுவதை ரசித்தபடி கிண்டலும் செய்தார். "காரை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நான் நினைப்பதைவிட என் கணவர் அதில் மிகவும் கவனமாக இருப்பார். அதனால், நிச்சயம் இப்போ இருக்கிற மாதிரியே பத்திரமாக வைத்துக்கொள்வார்" என்றபடி தன் கணவரிடம் புதிய கார் வாங்கியதாக ட்ரீட் கேட்டார் சுஜி.

இதனைத் தொடர்ந்து, நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழத் தெரிந்தால் நாம்தான் உலகத்தின் சிறந்த பணக்காரன் என்பதை சொல்லும் நீதிக்கதை ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். புதிய வண்டி என்பதால் சுஜிக்கு ஓட்டவேண்டும் என்று ஆசை வந்தது. அதனால், தன் மகனோடு வண்டியை ஸ்டார்ட் செய்து இரண்டு ரவுண்டு அடித்துவிட்டு, "எங்களுக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் அதனால் இந்த நிறத்தை வாங்கினோம். இந்த வண்டி ஓட்டுவதற்கு மிகவும் சூப்பராக உள்ளது. நிச்சயம் இந்த alcazar காரை நம்பி வாங்கலாம்" என்றபடி வண்டிக்குப் பூஜை போட்டுவிட்டு காணொளியையும் நிறைவு செய்தார் சுஜிதா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Actress Sujitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment