scorecardresearch

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஹேமா ராஜ்குமார் கியூட் போட்டோஸ்!

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

Hema Rajkumar
Pandiyan Stores Fame Hema Rajumar Photos collection

சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் மீனா மீதுதான் இருக்கிறது. ஆனால் இந்த புகழ் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. அதற்காக அவர் நீண்ட பயணம் செய்திருக்கிறார்.

நம் எல்லாருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவை-தானே தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்.

மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்தார்.

ஹேமா ஒரு உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.  பிற சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றினார்.

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

அதோடு, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

மூன்று சகோதரர்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம் மற்றும் அவர்களின் மளிகைக் கடையான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சீரியல், அதன் திரைக்கதையால் குடும்ப பார்வையாளர்களை ஈர்த்தது.

ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார். இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

கணவனிடம் கோபப்படுவது, கொழுந்தனாரிடம் வம்பிழுப்பது, நாத்தனார்களை பாடாய்படுத்துவது, வீட்டிலுள்ளவர்களை எடுத்தெறிந்து பேசுவது இதுதான் மீனாவின் முழு-நேர வேலை. 

இப்படி ஹேமா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், ஒருகட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகுவார் என வதந்திகள் பரவியது. அப்போது ஹேமா கர்ப்பமாக இருந்தார் சீரியலில் மட்டுமல்ல, நிஜமாகவே; ஆனால் குழந்தை பிரசவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை, ஹேமா சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

அதேபோல, குழந்தை பிறந்து மூன்று மாதத்துக்குள் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஆனால் இம்முறை ஹேமாவுடன் சேர்ந்து அவரின் குழந்தையும் நடித்துக் கொண்டிருக்கிறது.

ஹேமாவின் குழந்தையும் சுமார் ஒரு வருடத்துக்கும்  மேலாக கயல் என்ற ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறது. இதுவே இந்த சீரியலுக்கு பெரிய ஆத்மபலத்தை கொடுக்கிறது. இன்னும் சில நாட்களில் மீனாவின் குழந்தை கயலும் சீரியலில் டயலாக் பேச ஆரம்பித்து விடுவாள்.

இதுவரை தமிழ் சீரியலில் இதுபோன்ற பாக்கியம் யாருக்கு கிடைத்திருக்கும் என தெரியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pandiyan stores fame hema rajumar photos collection