பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹேமா ராஜ்குமார்.
Advertisment
மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்தார்.
ஹேமா ஒரு உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா.
பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார்.
அதோடு, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.
குழந்தை பிரசவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை, ஹேமா சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதேபோல, குழந்தை பிறந்து மூன்று மாதத்துக்குள் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
இம்முறை ஹேமாவுடன் சேர்ந்து அவரின் குழந்தையும் நடித்துக் கொண்டிருக்கிறது. ஹேமாவின் குழந்தையும் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக கயல் என்ற ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“