சின்னத்திரையில் முன்னணி தொடர்களான சன்டிவியின் ரோஜா மற்றும் விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருபவர் வெங்கடேஷ் ரங்கநாதன். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்தவர். பழனியில் பள்ளி படிப்பை முடித்து புதுக்கோட்டை கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார். சென்னைக்கு வேலை தேடி வந்தவர் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். முதன்முதலில் நடிகராக அறிமுகம் ஆனது கனா காணும் காலங்கள் தான். அதற்கு பிறகு தொகுப்பாளராக சன்மியூசிக்கில் நான்கு வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் சன்டிவியின் ஆண் பாவம் தொடரில் நடித்தார்.
Advertisment
பிறகு ஜீ தமிழின் புகுந்த வீடு, ஜெயா தொலைக்காட்சியின் மாயா போன்ற தொடர்களில் நடித்தார். பல சீரியல் தொடர்கள் நடித்திருந்தாலும் பெரிதாக ரீச் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2013-2017 வரை ஒளிபரப்பான விஜய்டிவியின் தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்திருந்தார். இந்த தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக பல சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஜீ தமிழின் மெல்ல திறந்தது கதவு, விஜய் தொலைக்காட்சியின் நினைக்கத் தெரிந்த மனமே போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு ஜோடி நம்பர் 1 சீசன் 10ல் போட்டியாளராக கலந்துகொண்டார். பின்னர் 2018 முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கேரக்டரில் நடித்து வருகிறார். அண்ணன் தம்பி பாசம், ஹேமாவுடனான காதல் என வெங்கட்டின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதே 2018ஆம் ஆண்டு முதல் சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோ அர்ஜூனுக்கு தம்பியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கும் பூஜாவுக்கும் இடையேயான ரொம்ன்ஸ் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து இயக்குநர் சேரன் திருமணம் படத்தில் நடிக்க வெங்கட்டை கேட்டுள்ளார். தொடர்ந்து 2019 ல் வெளியான திருமணம் என்னும் படத்தில் நடித்திருந்தார். பிறகு செய் படத்தில் நடித்தார். அதன்பிறகு குற்றம் 23 படத்தில் அருண்விஜயுடன் நடித்துள்ளார். வெங்கட்டின் மனைவி அஜூ வெங்கட் போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருகிறார். அவர்கள் இருவரும் பாலிடெக்னிக் படிப்பை ஒன்றாக தான் படித்து இருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட நட்பு தான் பின் காதலாக மாறி திருமணம் வரை சென்றிருக்கிறது. தற்போது அவர்களுக்கு மகிழினி என்கிற மகளும் இருக்கிறார். தற்போது எஸ்ஏ சந்திரசேகருடன் விரைவில் படமும் நடிக்க உள்ளார்.
2021 விஜய்டிவி விருதுகள் வழங்கும் விழாவில் Best supporting actor விருதை வென்றார். சின்னத்திரையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளார் வெங்கட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"