கனா காணும் காலங்கள் அறிமுகம்.. விஜே டூ ஸ்டார் ஆக்டர்ஸ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பர்சனல் ப்ரொஃபைல்!

Vijaytv Serial News: விஜய் டிவியில் 2013-2017ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் வெங்கட் நடித்திருந்தார். இந்த தொடர் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

venkat

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் வெங்கடேஷ் ரங்கநாதன். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். பழனியில் பள்ளி படிப்பை முடித்து பின்பு புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துள்ளார். சென்னைக்கு வேலை தேடி வந்தவர் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். முதன்முதலில் நடிகராக அறிமுகம் ஆனது கனா காணும் காலங்கள் தான். அதற்கு பிறகு தொகுப்பாளராக சன்மியூசிக்கில் நான்கு வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் சன்டிவியின் ஆண் பாவம் தொடரில் நடித்தார்.

பிறகு ஜீ தமிழின் புகுந்த வீடு, ஜெயா டிவியின் மாயா போன்ற தொடர்களில் நடித்தார். அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்தாலும் வெங்கட்டிற்கு ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு விஜய் டிவியில் 2013-2017ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்திருந்தார். இந்த தொடர் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக பல சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஜீ தமிழின் மெல்ல திறந்தது கதவு, விஜய் தொலைக்காட்சியின் நினைக்கத் தெரிந்த மனமே போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.

ஜோடி நம்பர் 1 சீசன் 10ல் போட்டியாளராக கலந்துகொண்டார். பின்னர் 2018 முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கேரக்டரில் நடித்து வருகிறார். அண்ணன் தம்பி பாசம், ஹேமாவுடனான காதல் என வெங்கட்டின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதே 2018ஆம் ஆண்டு முதல் சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோ அர்ஜூனுக்கு தம்பியாக நடித்து வந்தார். இந்த தொடரிலும் இவருக்கும் பூஜாவுக்கும் இடையேயான ரொம்ன்ஸ் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மட்டும் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் வெங்கட். டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து இயக்குநர் சேரன் திருமணம் படத்தில் நடிக்க வெங்கட்டை கேட்டுள்ளார். தொடர்ந்து 2019 ல் வெளியான திருமணம் என்னும் படத்தில் நடித்திருந்தார். பிறகு செய் படத்தில் நடித்தார். அதன்பிறகு குற்றம் 23 படத்தில் அருண்விஜயுடன் நடித்துள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். விஜய்டிவி விருதுகள் வழங்கும் விழாவில் Best supporting actor விருதை வென்றார். சின்னத்திரையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளார் வெங்கட்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandiyan stores jeeva roja serial actor ashwin venkatesh renganathan biography

Next Story
இன்டெர்மிட்டன்ட் டயட், முட்டை சாண்ட்விச், எலுமிச்சை – குக் வித் கோமாளி சுனிதா டயட் வைரல் வீடியோ!Cook with Comali Sunita Diet Viral Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X