paneer masala recipe paneer masala recipe in tamil
Paneer butter masala recipe tamil, Paneer butter masala : இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது. அவ்வளவு நல்லது உடம்புக்கு.சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என செய்து போரடித்தது போதும். வட இந்திய சுவையில் பனீர் பட்டர் மசாலா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
Advertisment
paneer butter masala recipe செய்முறை!
முதலில் சுடு தண்ணீரில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் பன்னீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைக்கவும். பிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, பால், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
Advertisment
Advertisements
பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.குழந்தைகள் விரும்பும் பனீர் பட்டர் மசாலா தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil