சுவையான, ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் ப்ரை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
குழம்பு மசாலா தூள் (கடைகளில் கிடைக்கும்) – ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கார்ன்ஃ ப்ளார் – 1 டீஸ்பூன்
அரிசிமாவு -அரை டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பன்னீரை சதுர வடிவில் நறுக்கி தனியே வைக்கவும். ஒரு பாத்திரம் எடுத்து அதில் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார் மாவு, அரிசி மாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சிறிதளவு சேர்த்து பிசையவும். குழம்பு மசாலா தூளில் உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவு சேர்த்தால் போதும்.
பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் பிசைய வேண்டும். பன்னீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டவும். இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவில் பிரட்டு எடுத்த பன்னீரை போட்டு பொரித்தெடுக்கவும். எண்ணெயை பொரிக்கும் பதத்திற்கு காய வைத்துப் போடவும். இல்லையென்றால் மசாலா பிரிந்து வந்து விடும். குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா கூட சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் ப்ரை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“