paneer masala recipe paneer masala recipe in tamil
Paneer masala recipe, paneer masala recipe in tamil : விடுமுறை தினங்களில், குழந்தைக்கு யம்மியாக சமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் இருக்கும். அப்படியானவர்களுக்காக, சூப்பர் டூப்பர் யம்மி ரெசிபி பனீர் மசாலா.புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
Advertisment
paneer masala recipe செய்முறை!
பன்னீர் - 200 கிராம்
பச்சை பட்டாணி - அரை கப்
Advertisment
Advertisements
பட்டர் - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பால் - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் பன்னீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைக்கவும். பிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, பால், தனியாத் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதில் பன்னீரை போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
பின்னர் வேக வைத்த பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கி அதனுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil