Advertisment

மொறு மொறு பன்னீர் நகட்ஸ்: ஹோட்டல் ஸ்டைலில் செய்ய ரெசிபி இங்கே

டோஃபு பன்னீர் நகட்ஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
paneer

சுவையான டோஃபு பன்னீர் நகட்ஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையானவை

டோஃபு பன்னீர் - 400 கிராம் 
கார்ன் ஃப்ளார் மாவு - தேவைக்கேற்ப 
மைதா மாவு - தேவைக்கேற்ப 
பிரட்தூள் - தேவையான அளவு 
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன் 
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவையான அளவு 
மிளகுத் தூள் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

முதலில் டோஃபு பன்னீரை சதுர வடிவில் நறுக்கவும். ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கி வைத்துள்ள டோஃபு பன்னீர், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதை 15 நிமிடம் ஊறவிடவும்.

அடுத்து ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி மைதா மாவு, மற்றொரு தட்டில் பிரட் தூள்கள், ஒரு பவுளில் கார்ன்ஃப்ளார் மாவுவை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும். டோஃபு பன்னீர் 15 நிமிடங்கள் ஊறிய பின்னர் முதலில் மைதா மாவில் டிப் செய்து பின்னர் அதை கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்து அடுத்து அதை பிரட் தூளில் பிரட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் காய வைக்கவும். 

இப்போது கடாய் எடுத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய வைத்த டோஃபு பன்னீரை போட்டு எடுத்தால் சுவையான டோஃபு பன்னீர் நகட்ஸ் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment