Paneer recipe, paneer recipe in tamil : குழந்தைகளுக்கு லீவு விட்டாலே போதும் சேட்டையும், ரகலையும், கும்மாளமாக வீடு தலைகீழாக மாறிவிடும். இதனால் தாய்மார்களுக்கு தான் திண்டாட்டம். அதுவும் இல்லத்தரசிகளுக்கு கேட்கவே வேண்டாம். இதனால் குழந்தைகளை சரிக்கட்டி அவர்களுக்கு பிடித்த ஐட்டங்களை செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தி அவர்களின் உடல் எடையை கூட்டுங்க. அதுவும் அவர்களுக்கு பிடித்த பன்னீர் ரெசிப்பிக்களை செஞ்சு சும்மா அசத்துங்க.
Advertisment
paneer recipe in tamil : செய்முறை!
முட்டைக்கோஸ் துருவல் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
Advertisment
Advertisements
பன்னீர் துருவல் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - ஒரு ஸ்பூன்
பிரெட் தூள் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ் துருவல், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் துருவல், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ அல்லது நீளவாட்டில் உருட்டிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். குழந்தைகளுக்கு பிடித்தமான கேபேஜ் பன்னீர் ரோல் ரெடி.