/tamil-ie/media/media_files/uploads/2021/11/panneer.jpg)
ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யும்போது, அவரது உணவு முறை மாறுகிறது. பலவற்றை கழித்து, உணவில் சில மாற்றங்களை செய்த பிறகும், தங்கள் தட்டில் என்ன வைக்கிறார்கள் என்பதில் நோயாளி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்போதாவது இன்பத்துக்குக் கூட ஏதும் சாப்பிடக்கூடாது. அதேநேரம் அவர்கள் தங்கள் சுவை மொட்டுகளை மகிழ்ச்சியடையச் செய்வதற்கான பிற வழிகள் உள்ளன, அதே நேரத்தில் ஆரோக்கிய காரணியையும் மனதில் வைத்துக்கொள்ளலாம்.
டயாலிசிஸ் நோயாளிக்கு மிகவும் பயன் தரும் பனீர் ஷாஷ்லிக் சமையல் குறிப்பு இதோ!
தேவையான பொருட்கள்
- பனீர் - 500 கிராம் க்யூப்ஸ்
- பச்சை மிளகாய் - 1 (50 கிராம்)
- வெங்காயம் - 1 (50 கிராம்)
- தக்காளி - 1 (50 கிராம்)
- சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 3-4 தேக்கரண்டி
மெரினேட் செய்வதற்கு
- தயிர் - 100 கிராம்
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - ½ தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்
- உப்பு - ¼ தேக்கரண்டி அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி
செய்முறை
ஒரு பெரிய கண்ணாடி கிண்ணத்தில், மெரினேட் செய்வதற்கு தேவையான பொருட்களை கலக்கவும். அதனுடன் பனீர், கேப்சிகம், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும். காய்கறிகள் மற்றும் பனீரை மெரினேட் கலவையில் நன்கு பூசவும். பின்னர் கிண்ணத்தை ஒரு துணியை வைத்து 1 மணி நேரம் மூடி குளிரூட்டவும்.
மூங்கில் குச்சிகளில் எண்ணெய் தடவி, பனீர், வெங்காயம், குடைமிளகாய் மற்றும் தக்காளியை ஷாஷ்லிக் (எகா; கெபாப்) போல அடுக்கவும்.
ஒருவேளை நீங்கள் மைக்ரோ-அவனில் கிரில் செய்தால், முன்கூட்டியே அடுப்பை 250 டிகிரி சென்டிகிரேடில் சூடாக்கி, 20-25 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மிதமான தீயில், இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஷாஷ்லிக்கை மாற்றி மாற்றி போடுவதன் மூலமும் அவற்றை கிரில் செய்யலாம். சூடாக பரிமாறவும்.
ஊட்டச்சத்து மதிப்பு
- கலோரிகள் - 151.7 கிலோகலோரி
- புரதம் - 7.2 கிராம்
- சோடியம்-73.3 மி.கி
- பொட்டாசியம்-178.2 மி.கி
- பாஸ்பரஸ்-187.3 மி.கி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.