Advertisment

பானி பூரி வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pani puri recipe pani puri recipe in tamil

pani puri recipe pani puri recipe in tamil

/< : மாலை நேரத்தில் கூட்டமாக சேரும் நண்பர்கள், ஸ்நாக்ஸ் இல்லாமல் டீ குடிப்பது கிடையாது. ஒரு காலத்தில் வடை, பஜ்ஜி, போண்டா, காராசேவு, பக்கோடா... என இருந்த நொறுக்குத்தீனிப் பழக்கம், சமீப காலங்களில் வேறு தளத்துக்குப் போய்விட்டது. அதிலும் இன்று கொடிகட்டிக் கோலோச்சும் நொறுக்குத்தீனி என்பது, நகரம் தொடங்கி சிற்றூர் வரை தெருவுக்குத் தெரு களைகட்டும் பானி பூரி வியாபாரம்.

Advertisment

ஆனால், ரோட்டுக்கடையில் சாப்பிடும் பானிபூரி ஆரோக்கியம் அற்றது என்ற பேச்சும் உண்டு. இனி அந்த கவலைவிடுங்க. வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி

pani puri recipe : பானி பூரி செய்முறை!

முதலில், ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, உப்பு, பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதன் மீது, ஒரு ஈரத்துணிப் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும். மீண்டும் மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை இரண்டு துண்டுகளாக எடுத்து, ஒரு உருண்டையை பெரியளவில் உருட்டி விரித்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு சின்ன வட்டமான கப் எடுத்து மாவு மீது அழுத்தி சின்ன சின்னப் பூரிமாவாக எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன சின்னப்பூரிகளை போடவும். பூரி நன்றாக உப்பி, பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைக்கவும். அவ்ளோதாங்க.. பூரி தயார். இத்துடன், உருளைக்கிழங்கு மசாலா மற்றும், புதினா பானி சேர்த்து சாப்பிட்டால் சுவையான பானி பூரி ரெசிபி ரெடி..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment